தமிழ் சினிமாவில்இருக்கின்ற இடம் தெரியாமல் சைலண்டாக பல வெற்றி படங்களை கொடுத்து வருவர் தனுஷ். இவர் ஒரு நடிகராக மட்டும் தன்னை நிறுத்திக் கொள்ளாமல் பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் பல அவதாரங்கள் எடுத்து பன்முகத்தன்மை கொண்டவராக ஓடி கொண்டிருக்கிறார். அதே சமயம் நடிகர் தனுஷ் திரை உலகில் பிரபலங்களை வளர்த்து விட்டிருக்கிறார் அதில் முக்கிய 5 பிரபலங்கள் பற்றி தற்பொழுது பார்ப்போம்..
1. அனிருத் : இளம் வயதிலிருந்தே இசையமைப்பாளராக வேண்டும் என்ற எண்ணம் அனிருத்துக்கு அதிகம் இருந்தது ஆனால் அவரது திறமையை உலகிற்கு முதலில் காட்டியவர் தனுஷ். தனது 3 திரைப்படத்தில் அனிருத்தை இசையமைக்க வைத்து அழகு பார்த்தார். அதன் பிறகு தனுஷின் அடுத்தடுத்த படங்களில் இசையமைத்து தற்பொழுது தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளராக விஸ்வரூபம் எடுத்துள்ளார்.
2. வெற்றிமாறன் : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஜோடி என்றால் அது வெற்றிமாறன், தனுஷ் தான்.. இவர்கள் இருவரும் இணைந்து வடசென்னை, பொல்லாதவன், அசுரன், ஆடுகளம் என பல ஹிட் படங்களை கொடுத்திருக்கின்றனர். வெற்றிமாறனுக்கு முதலில் வாய்ப்பு கொடுத்து சினிமா பக்கம் இழுத்து விட்டவர் தனுஷ்.
3. சிவகார்த்திகேயன் : விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், காமெடியனாகவும் ஓடிக் கொண்டிருந்தவர். பிறகு சினிமா பக்கம் வந்த சிவகார்த்திகேயனை வைத்து அடுத்தடுத்த படங்களை தயாரித்து அவரை வளர்த்து விட்டார் தனுஷ்.
4. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் : இவர் 2012 ஆம் ஆண்டு தனுஷை வைத்து 3 என்னும் படத்தை இயக்கிய அறிமுகமானார். அதனை தொடர்ந்து வை ராஜா வை இப்போ விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர்களை வைத்து “லால் சலாம்” என்னும் படத்தை உருவாக்கி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் திறமையை அப்பொழுதே கண்டறிந்து அவரை இயக்குனராக அறிமுகப்படுத்தினார் தனுஷ்.
5. ராஜ்கிரண் : 80, 90 கால கட்டங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமடைந்த இவர் இப்பொழுது ஹீரோவுக்கு அப்பா, சித்தப்பா போன்ற கதாபாத்திரங்களில் நடித்த ராஜ்கிரணை பவர். பாண்டி திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்து அழகு பார்த்தவர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.