இலங்கை அணிக்கு எதிராக t-20 போட்டியில் 6 பந்துகள் 6 சிக்ஸர்கள் அடித்து விளாசியுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்ரன் பொல்லார்ட் இவரின் இந்த சாதனையின் ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் பங்கேற்றுள்ளார்கள். இதில் நேற்று முதல் போட்டி நடைபெற்றது அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பீல்டிங் தேர்வு செய்தது.
அதனால் இலங்கை அணி பேட்டிங் செய்தது முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் நிரோசன் டிக்வெல்ல மற்றும் தனுஷா குணதிலக இருவரும் துவக்க வீரர்களாக களம் இறங்கினார்கள் இதில் குணதிலக வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
பிறகு அடுத்ததாக களமிறங்கிய நிஷானாவுடன் டிக்வெல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தார்கள் இருவரும் இணைந்து 30 ரன்கள் கடந்து ஆட்டம் இழந்தார்கள். அடுத்தடுத்து இறங்கியவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து திரும்பியதால் இலங்கை அணி வெறும் 20 ஓவர் முடிவில் 131 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது அதில் 9 விக்கெட்டுகளை இழந்தது.
132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி துவக்க வீரர் சிம்மன்ஸ் (26) மற்றும் இவின் லீவிஸ் (28) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்கள் சிறப்பான ஆட்டத்தை துவங்கி வைத்தார். ஆனால் நான்காவது ஓவரை வீசிய சுழல் பந்துவீச்சாளர் அகில தனஞ்சய ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதில் லிவிஸ், கிறிஸ்கெயல், நிகோலாஸ், பூரன் என அனைவரும் அடுத்தடுத்து விக்கெட் ஆனார்கள். அடுத்ததாக களமிறங்கிய பொல்லார்ட் தனஞ்சயா வீசியா ஆறாவது ஓவரில் 6 சிக்சர் பறக்கவிட்டார். இதனால் 13.1 ஓவரில் 134 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள்.
இதோ அந்த வீடியோ
Absolute scenes 🤯@KieronPollard55 becomes the first @windiescricket player to hit six straight sixes in a T20I!#WIvSL pic.twitter.com/nrtmJHGcip
— ICC (@ICC) March 4, 2021