நடிகர் சிம்பு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் கைகோர்த்து சமீபத்தில் நடித்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தில் நடிகர் சிம்புவை வித்தியாசமாக காட்டி இருப்பார் இயக்குனர் கௌதம் மேனன் . சிம்புவும் சும்மா சொல்லிவிடக்கூடாது படத்தின் கதைக்கு ஏற்றவாறு சுமார் 22 கிலோ உடல் எடையை குறைத்து கதைக்காக 18 வயது பையனாக நடித்தார்..
அந்த காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வியக்க வைத்தது. இந்த படத்தின் கதை என்னவென்றால் கிராமத்தில் இருக்கும் ஒரு சிறுவன் மும்பை பக்கம் போய் எப்படி மிகப்பெரிய ஒரு டானாக மாறுகிறான் என்பதுதான் கதை படம் மாஸாக இல்லை என்றாலும் கிளாஸ் ஆக இருந்தது பலருக்கும் இந்த படம் பிடித்து போய் உள்ளது. பலரும் இந்த படத்தை பார்க்க திரையரங்கை நாடி உள்ளனர்.
இந்த படத்தில் சிம்பு உடன் கைகோர்த்து ராதிகா சரத்குமார், neeraj madhav, siddhi idnani, kayadu lohar மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படத்தின் வசூல் ஆரம்பத்திலேயே நன்றாக அள்ளியது வரும் நாட்களில் நன்றாக அள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் வசூல் குறைந்து கொண்டே போகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் 6 நாள் முடிவில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 50 கோடிக்கு மேல் வசூலித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
வருகின்ற நாட்களில் இன்னும் சில கோடிகளை கன்ஃபார்மாக சிம்புவின் வெந்து தணிந்து காடு படம் என்ன கருதப்படுகிறது. மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து இந்த படமும் ஒரு வெற்றி படமாக பார்க்கப்படுகிறது இதனால் நடிகர் சிம்பும், அவரது ரசிகர்களும் செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.