சினிமாவைப் பொறுத்தவரை ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மக்கள் ஒரு கருத்துக்கணிப்பில் இருந்தார்கள். அந்த சமயத்தில் இளம் நடிகர்களாக அறிமுகமான ஒரு சிலரை மக்கள் இதெல்லாம் ஒரு மூஞ்சா என்று விமர்சித்தனர். ஆனால் அந்த அவமானத்தை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன் விடாமுயற்சியால் தற்போது முன்னணி நடிகர்களாக மாறிய 6 நடிகர்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
பகத் பாசில் :- இவர் மலையாள திரைப்படம் நடிகராக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் மலையாளத்தில் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் தற்போது தமிழில் விக்ரம் திரைப்படத்தில் பிறகு அவருடைய மார்க்கெட் உயர்ந்தது.
இவர் சினிமாவில் அறிமுகமாகும் போது மக்கள் பகற்பா சிலை ஹீரோவாக ஏற்க மறுத்தனர் இதனால் பல விமர்சனங்களையும் சந்தித்தார். பிறகு தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தனுஷ்:- ஒல்லியான உடல் பாவனையை வைத்துக்கொண்டு சிறு பையனாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர் தான் தனுஷ். இவரை ஆரம்பத்தில் மக்கள் ஹீரோவாக ஏற்றுக்கொள்ள சிறிது தயங்கினார்கள் அதுமட்டுமல்லாமல் இவரை கேலி கிண்டலும் செய்தார்கள். இருப்பினும் தனது விடா முயற்சியால் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
விஜய்:- ஒரு இயக்குனரின் மகனாக சினிமாவில் நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் விஜய். இவர் நடிக்க வந்த புதிதில் இதெல்லாம் ஒரு மூஞ்சா இவரை எப்படி ஹீரோவாக ஏற்றுக் கொள்ள முடியும் என்று பல விமர்சனங்களை வைத்தார்கள். ஆனால் நடிகர் விஜய் இந்த அவமானத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சினிமாவில் தற்போது சாதித்துக் காட்டி வருகிறார்.
துல்கர் சல்மான் :- மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருப்பவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் என்னதான் பிரபல நடிகரின் மகனாக இருந்தாலும் ஆரம்பத்தில் பல தோல்வி படங்களை கொடுத்து விமர்சனங்களுக்கு உள்ளானார். ஆனால் தற்போது மலையாளத்தில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பிரபுதேவா :- சினிமாவிற்கு குரூப் டான்சராக அறிமுகமானவர்தான் பிரபுதேவா அதன் பிறகு தற்போது டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டு விளங்கி வருகிறார். இவர் தன் சினிமா வாழ்க்கையில் நடிக்க வந்தபோது இவரை பலரும் கலாய்த்தனர் அது மட்டுமல்லாமல் இவருக்கு நடிகருக்கான தகுதியே இல்லை என்று விமர்சித்தனர். ஆனால் அதையெல்லாம் பெருசாக எடுத்துக் கொள்ளாமல் தற்போது சினிமாவில் தனக்கென இடத்தைப் பிடித்துள்ளார்.
சத்யராஜ்:- சினிமாவில் ஆரம்பத்தில் வில்லனாக நடித்து வந்த சத்யராஜ் ஒரு காலகட்டத்திற்கு பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் ஆனால் மக்கள் சத்யராஜ் வில்லனாக பார்த்து பார்த்து அவரை ரசித்ததால் ஹீரோவாக அவரை பார்க்க முடியவில்லை. இதனாலேயே அவர் ஹீரோவாக நடித்த பல திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தது.
அதன் பிறகு அவருடைய வில்லத்தனமான வசனங்களாலும், நக்கல் நையாண்டியாலும் அவரை ஹீரோவாக ஏற்க தொடங்கினர் தற்போது சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.