தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்களாக இருக்கும் பலர் என்னதான் சினிமாவில் உச்சத்தை தொட்டாலும் திருமண வாழ்க்கை என்று வரும் போது அவர்களது பெற்றோர்கள் கையில் ஒப்படைத்து விடுகின்றனர். அவர்களும் பொருளாதார ரீதியாக உயர்ந்த இடத்திலேயே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கின்றனர் அல்லது காதல் திருமணம் என்றாலும் பணக்கார பெண்ணா என பார்த்து தான் வளைத்து போடுகின்றனர். அப்படி கோடீஸ்வர வீட்டுப் பெண்களை திருமணம் செய்து கொண்ட ஆறு நடிகர்களை பற்றி பார்ப்போம்..
1. ஆர்யா : இவர் சினிமாவில் ஆரம்பத்தில் பல பெண்களிடம் காதலில் சிக்கியவர் ஆனால் கல்யாணம் என்று வந்தவுடன் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு இரண்டு வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. நடிகை சாயிஷா இந்தியாவில் இருக்கும் முக்கிய கோடீஸ்வரிகளில் ஒருவர். இவருடைய அப்பா அம்மா இருவருமே பாலிவுட்டில் மிகப்பெரிய பிரபலங்கள் ஆவார்கள்.
2. விக்ரம் பிரபு : இவர் தன்னுடைய 20 வயதிலேயே லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். விக்ரம் பிரபுவின் அப்பா பிரபுவுக்கு நெருங்கிய நண்பரின் மகள் தான் லட்சுமி. விக்ரம் பிரபுவின் மாமனார் சேலத்தில் இருக்கும் மிகப் பெரிய கல்லூரியான எஸ் எஸ் எம் கல்லூரியின் நிறுவனர் ஆவார். காதல் திருமணம் செய்து இருந்தாலும் விக்ரம் பிரபுவும் பெரிய இடமாக பார்த்து தான் பிடித்திருக்கிறார்.
3. அருண் விஜய் : நடிகர் அருண் விஜய் சினிமாவில் நீண்ட வருடங்களாக போராடி தற்போது தான் தனக்கான ஒரே நிரந்தர இடத்தை பிடித்திருக்கிறார். இவருக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான். இருந்தாலும் அருண் விஜய் திருமணம் செய்திருக்கும் ஆர்த்தி மோகன் என்ற பெண்ணின் அப்பா மிகப்பெரிய ஒரு திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். அருண் விஜயை சினிமா கேரியரில் உயர்த்த அவருடைய மாமனார் மாஞ்சா வேலு, மலை மலை போன்ற படங்களையும் தயாரித்திருந்தார் என்பதும் குறிப்பிட தக்கது.
4. ஜெயம் ரவி : நடிகர் ஜெயம் ரவியும் பெரிய இடத்து பெண்ணாக பார்த்து தான் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆர்த்திக்கும் சமூக வலைத்தளங்களில் பல ரசிகர்களும் இருக்கின்றன. ஆர்த்தியின் அப்பா தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மேனேஜர் ஆவார் மற்றும் ஆர்த்தியின் அம்மாவும் சின்னத்திரை தயாரிப்பாளராவார்.
5. விஜய் : நடிகர் விஜய் சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். சங்கீதாவின் குடும்பம் இலங்கையில் இருந்து லண்டனுக்கு குடி பெயர்ந்தது லண்டனில் சங்கீதாவின் அப்பா பெரிய தொழிலதிபராக இருக்கிறார் மேலும் இலங்கையிலும் இவருக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கின்றதாம்.
6. கார்த்தி : நடிகர் கார்த்தி சொந்தத்திற்குள் தான் திருமணம் செய்து கொண்டார். கார்த்தியின் அண்ணன் சூர்யா காதல் திருமணம் என்பதால் இவர்களுடைய அப்பா சிவக்குமார் கார்த்தி வீட்டில் பார்க்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்துள்ளார். கார்த்தியும் தன் அப்பாவின் ஆசையை நிறைவேற்றி வீட்டில் பார்த்த ரஞ்சினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். ரஞ்சினியின் அப்பாவும் ஈரோட்டில் பெரிய தொழிலதிபராவாரம். அங்கு இவர்களுக்கு கோடிக்கணக்கான சொத்து மதிப்பும் இருக்கிறதாம்..