தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் சில நடிகர் நடிகைகள் ஆரம்பத்தில் துணை கதாபாத்திரத்தில் தான் அறிமுகம் ஆகி இருந்தனர்.அப்படி துணை கதாபாத்திரத்தில் நடித்து தற்போது டாப் நடிகர் நடிகைகளாக இருக்கும் முக்கிய ஆறு பிரபலங்கள் பற்றி பார்ப்போம்.
சிவகார்த்திகேயன்: இவர் ஆரம்பத்தில் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்தவர் பின்பு இவரது திறமையை பார்த்த தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார் இதைத் தொடர்ந்து ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்த ரசிகர்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக இருந்து வருகிறார்.
த்ரிஷா: இவர் தமிழில் முதலில் பிரசாந்த் சிம்ரன் நடிப்பில் வெளிவந்த ஜோடி திரைப் படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்து வந்தார் பின்பு லேசா லேசா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் அதைத் தொடர்ந்து தற்போது டாப் நடிகையாக வலம் வருகிறார்.
நடிகர் விஜய் சேதுபதி: இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த புதுப்பேட்டை திரைப்படத்தில் துணைக் கதாநாயகனாக நடத்து அறிமுகமானார். அதை தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக நடித்தார் தற்போது தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்திலும் பின்னி பெடல் எடுத்து வருகிறார்.
சந்தானம்: இவரும் டிவி தொலைக்காட்சிகளில் தான் அறிமுகமானார் பின்பு சிம்பு நடிப்பில் வெளிவந்த மன்மதன் திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார் அதனை தொடர்ந்து தற்போது சிறந்த காமெடியன் ஹீரோ என தமிழ் சினிமாவின் கலக்கி வருகிறார். ஜோதிகா : இவர் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் வெளிவந்த வாலி இத்திரைப்படத்தில் அஜித்தின் முன்னாள் காதலியாக நடித்து இருந்தார்.
அப்போது அவரது அழகை பார்த்து பின்பு எஸ் ஜே சூர்யா குஷி என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்தார் இதை தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நல்ல கருத்துள்ள படங்களை தேர்வு செய்து சிறப்பாக நடித்து வருகிறார். மாதவன் : இவர் முதலில் ஹிந்தி தொலைக்காட்சி சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் பின்பு தமிழில் அலைபாயுதே படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.