பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபல நடிகர் ஒருவரின் காதல் வலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஒருவர் சிக்கி உள்ளதாக சினிமா வட்டாரத்தில் தற்போது செய்திகள் ஒன்று பரவி வருகிறது. அதாவது பிரபலம் முன்னாடி நடிகை ஒருவர் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து பாலிவுட் பக்கம் திரும்பி அந்த நடிகை பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார். இதை தொடர்ந்து மீண்டும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் தமிழில் ரீ என்றி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் அந்த முன்னணி நடிகை ஒருவர் பாலிவுட்டில் 56 வயதான பிரபல நடிகர் ஒருவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். அவரை தான் அந்த நடிகை காதலித்து வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அந்த 56 வயது ஆகும் நடிகர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தாலும் அவர் பல நடிகைகளுடன் தொடர்பில் இருந்ததாக பல கிசுகிசுக்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் அந்த முன்னணி நடிகை தற்போது அந்த 56 வயது நடிகருடன் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி அந்த நடிகருக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கும் அந்த நடிகை அவர் மீது காதல் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அந்த நடிகை தரப்பிலிருந்தும் அந்த நடிகர் தரப்பில் இருந்தும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.