2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை பல திரைப்படங்கள் வெளியானாலும் இந்த வருடத்தில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வசூலாக அமைந்த திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி வெளியாகிய கல்கி 2898 ஏடி தான். இந்த திரைப்படம் இந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் ஆட்டத்தையே மாற்றி அமைத்துள்ளது.
2024 ஆம் ஆண்டு முதல் பாதி முடிவடைந்த நிலையில் பல திரைப்படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளது அதேபோல் கல்கி 2898 ஏடி திரைப்படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்ததால் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தியது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு முதல் பாதியில் வெளியாகிய திரைப்படங்கள் இந்திய பாக்ஸ் ஆபிஸில் 5000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதில் ஜூன் மாதத்தில் வெளியாகிய கல்கி 2898 ஏடி திரைப்படம் மட்டும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று சாதி படைத்துள்ளது.
கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வெளியான திரைப்படங்களின் மொத்த பாக்ஸ் ஆபீஸ் வசூல் 5015 கோடியாக கூறபடுகிறது. இந்த வசூல் 2023 ஆம் ஆண்டு வசூலை விட மூணு சதவீதம் அதிகமாக இருக்கிறது. அதேபோல் ஹர்திக் ரோஷனின் பைட்டர் படத்தின் வசூலை விட கல்கி திரைப்படத்தின் வசூல் மூன்று மடங்காக இருக்கிறது.
அந்த வகையில் ரித்திக் ரோஷனின் ஃபைட்டர் 243கோடியும், ஹனுமான் 240 கோடியும், ஷைத்தான் 178 கோடியும், மஞ்சுமெல் பாய்ஸ் 170 கோடியும் குண்டூர் காரம் 142 கோடியும், காட்சிலா எக்ஸ் காங்க் தி நியூ எம்பயர் 136 கோடியும், மூஞ்சியா என்ற ஹிந்தி திரைப்படம் 121 கோடியும், ஆடு ஜீவிதம் 104 கோடியும், ஆவேஷம் 101 கோடியும் வசூல் செய்துள்ளது.
2023 இல் முதல் பாதியில் பதான் செய்த வசூலை இந்த ஆண்டு எந்த ஒரு திரைப்படமும் முறியடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.