தமிழகத்தில் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் அவர்கள் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் இதுவரைக்கும் 500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படமும் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் ஒரே தேதியில் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் மோதிக்கொண்ட நிலையில் ஒன்றுடன் ஒன்று சளைத்தது கிடையாது என்பது போல வசூல் வேட்டை அடி வருகிறது. அந்த வகையில் அஜித்தின் துணிவு திரைப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை ஆடி உள்ள நிலையில் விஜயின் வாரிசு திரைப்படம் 210 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தற்போது விஜயின் வாரிசு மொத்த வசூல் 510 கோடி என கூறப்படுகிறது. அதாவது விஜயின் வாரிசு திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே 300 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது இதனை தொடர்ந்து திரையரங்கிற்கு வெளியான வாரிசு கடுமையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூலில் நல்ல லாபம் பார்த்து வருகிறது அந்த வகையில் வெளியான ஏழு நாட்கள் முடிவில் வாரிசு திரைப்படம் 210 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மொத்தம் வாரிசு திரைப்படம் 510 கோடி என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து தயாரிப்பு நிறுவனம் எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இது தற்போது இணையத்தில் பரவக்கூடிய ஒரு தகவலாக உலா வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கபடுகிறது.