Malavika mohanan : தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக வருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் ரஜினி நடிப்பில் உருவான பேட்ட படத்தில் சசிக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து விஜயின் மாஸ்டர், தனுஷின் மாறன் படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் “தங்கலான்” படத்தில் நடித்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது படக்குழு போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது இந்த படம் முழுக்க முழுக்க கோலார் தங்க சுரங்கத்தில் மனிதர்கள் பட்ட கொடுமைகள் மற்றும் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை பற்றியே விலாவாரியாக இந்த படம் விவரிக்க இருக்கிறது.
இந்த படத்தில் விக்ரம், மாளவிகா மோகனுடன் இணைந்து பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன், மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துயுள்ளனர். இந்த படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருகின்றனர் இந்த நிலையில் மாளவிகா மோகனன் தனது முடிவை மாற்றி உள்ளார். அடுத்தடுத்து படங்களை தேர்வு செய்வதில் மாற்றங்கள் இருக்கும் இனி தனக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களில் இனி நடிக்கப் போவதில்லை என கூறி உள்ளார்.
எவ்வளவு பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி ஏன் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் படமாக இருந்தாலும் அதில் தனக்கு கதாபாத்திரத்திற்கு ஏதாவது முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே தான் அத்தகைய படங்களில் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் எவ்வளவு பெரிய வெற்றி படமாக இருந்தாலும் அதில் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் நடித்தால் மக்கள் அதை மறந்துதான் போவார்கள் என்று அவர் கூறியுள்ளார். தங்கலான் படத்திற்கு பிறகு மாளவிகா இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.