சினிமா உலகில் ஹீரோக்கள் தான் நன்றாக சம்பாதிக்கிறார்கள் என்றால் அதைவிட வில்லன் நடிகர்களும் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி பெரிய அளவில் சம்பாதிக்கின்றனர் அப்படி கோடி கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருக்கும் 5 வில்லன் நடிகர்களை பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்..
ராணா டகுபதி : தெலுங்கு சினிமாவில் பிரபலமான இவர் பாகுபலி படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடித்து அசத்தினார். அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து வருகிறார். இவர் ஒரு படத்திற்கு அதிகபட்சமாக 5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இவரின் சொத்து மதிப்பு சுமார் 40 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
ஒரே நேரத்தில் 3 முரட்டுக் குதிரையை ஓட்டிய வி நடிகர்.! ஆத்தாடி முரட்டு படியாய் இருப்பாரோ..
அசுதோஷ் ராணா : நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பலவற்றில் கால் தடம் பதித்த இவர் வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார் தமிழில் வேட்டை என்கின்ற படத்தில் அண்ணாச்சியாக அறிமுகமான இவர் அதன் பிறகு மொட்ட சிவா கெட்ட சிவா, ஜானி, சங்க தமிழன் போன்ற படங்களில் வில்லனாக நடித்து முத்திரை பதித்தார் இவருடைய மொத்த சொத்து மதிப்பு 55 கோடி.
முகேஷ் ரிசி : தமிழில் சிங்கம் 2, வல்லரசு போன்ற படங்களில் தீவிரவாதியாக நடித்துள்ளார் இவர் தமிழையும் தாண்டி மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா படத்திலேயும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இவருடைய மொத்த சொத்து மதிப்பு சுமார் 41 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
சிறுத்தையை வீட்டில் வளர்த்த பிரபல நடிகை.? இதுக்கெல்லாம் தனி தில்லு வேணும் – வைரலாகும் புகைப்படம்
பிரகாஷ்ராஜ் : தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகரான இவர் குணச்சித்திரம், வில்லன், அப்பா என பல்வேறு விதமான கேரக்டர்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் கடைசியாக கூட விஜயின் வாரிசு திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படிப்பட்ட பிரகாஷ்ராஜ் ஒரு படத்திற்கு மூன்று கோடி சம்பளம் வாங்குகிறார் இவருடைய சொத்து மதிப்பு சுமார் 42 கோடிக்கு மேல் இருக்கிறது.
ஆஷிக் வித்யார்த்தி : தில் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதனைத் தொடர்ந்து பாபா, ஏழுமலை, பகவதி, தமிழ், தமிழன் என சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு பல படங்களில் வில்லனாக நடித்து பெயரைப் பெற்றார். இவர் ஒரு படத்திற்கு இரண்டு கோடி சம்பளம் வாங்குகிறார் இவருடைய சொத்து மதிப்பு சுமார் 84 கோடி இருக்குமென கூறப்படுகிறது.