Vijay sethupathi : விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல நடிகர்கள் நடித்தால் ஹீரோவாக நடிப்பேன் என பிடிவாதம் பிடிப்பார்கள் ஆனால் விஜய் சேதுபதி அதற்கு நேர் எதிராக நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் போதும் என வில்லனாக நடித்து மிரட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் விஜய் சேதுபதி பாலிவுட்டில் ஷாருக்கான் அவர்களுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் வில்லனாக மிரட்டி உள்ளார் ஆனால் ஜவான் திரைப்படத்திற்கு முன்பே விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டிய ஐந்து திரைப்படங்களை இங்கே காணலாம்.
மாஸ்டர்: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்து விஜய் சேதுபதி மிரட்டி இருந்தார்.
விக்ரம் வேதா: 2017 ஆம் ஆண்டு புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன் விஜய் சேதுபதி, ஷ்ரதா ஸ்ரீநாத், கதிர், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் விக்ரம் வேதா இந்த திரைப்படத்தில் மாதவனுக்கு வில்லனாக வேதா என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
விக்ரம் : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் விக்ரம் இந்த திரைப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக விஜய் சேதுபதி சந்தானம் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.
பேட்ட : 2019 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், சசிகுமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் பேட்ட இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி ஜித்து சிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
உப்பென்னா : வைஷ்ணவ தேஜ், கீர்த்தி ஷெட்டி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் உப்பென்னா இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கோத்தகிரி சேஷா ராயணம் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.