2022-ல் கொடூர வில்லனாக நடித்த 5 டாப் ஹீரோக்கள்.! rolex கதாபாத்திரத்தில் மிரட்டிய சூர்யா

surya
surya

காலம் புதியதை நோக்கி நகர நகர நடிகர்களும் தன்னை புதுப்பித்துக் கொள்கின்றனர் அந்த வகையில் ஹீரோக்கள் அண்மை காலமாக வில்லன், குணச்சித்திரம் மற்றும் கெஸ்ட் ரோல் போன்றவற்றில் நடித்து வெற்றி கண்டு வருகின்றனர் அந்த வகையில் 2022 ல் வில்லன் ரோலில் நடித்த 5 உச்ச நட்சத்திர நடிகர்களை பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்.

1. விஜய் சேதுபதி :  தன்னை தேடி வரும் நல்ல கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதில் நடிக்க ரெடியாக இருக்கிறார் அதனால் தான் அவர் ஹீரோ என்ற இமேஜையும் தாண்டி வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் அதிக அளவில் இடம்பெடுத்திருக்கிறார். இவர் இந்த வருடத்தில் வெளியான விக்ரம் திரையை படத்தில் சந்தானம் என்கின்ற வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்.

2. தனுஷ் : இவர் அவரது அண்ணன் செல்வராகவனுடன் கைகோர்த்து நடித்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான் அந்த வகையில் அண்மையில் செல்வாராகவனுடன் இணைந்து தனுஷ் நடித்த திரைப்படம் நானே வருவேன் இந்த படத்தில் தனுஷ் இரட்டை வருடத்தில் நடித்திருந்தார் அதில் கதிர் என்கின்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து மக்களை அலறவிட்டு இருந்தார் தனுஷ்.

3. எஸ் ஜே சூர்யா  : சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவான திரைப்படம் டான். இந்த திரைப்படம் எஸ் ஜே சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து வெற்றி கண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. வினய் : ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து ஓடிக்கொண்டிருந்த இவர் அண்மைக்காலமாக வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டி வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதனை தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் சைலன்ட் வில்லனாக நடித்து அசத்தினார் தற்பொழுதும் வில்லனாக நடிக்க அதிக பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.

5. சூர்யா : ஹீரோவாக மட்டுமே நடித்து வெற்றியை கண்டு வந்தவர். இந்த வருடத்தில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் இந்த கதாபாத்திரம் இப்பொழுதும் பலருக்கும் பிடித்த கதாபாத்திரமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.