அஜித்துடன் ஜோடி சேர முடியாமல் தவிக்கும் 5 டாப் நடிகைகள்.! லிஸ்ட்டில் சிக்கிய ரஜினி பட நடிகை.

ajith
ajith

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் நடிகர்களில் அஜித் விஜய்க்கு தான் அதிக மார்க்கெட் இருக்கிறது. மேலும் இவர்களுக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது. அதனால் முன்னணி நடிகைகள் முதற்கொண்டு வளர்ந்து வரும் நடிகைகள் வரை பலரும் அஜித் விஜய் உடன் ஜோடி போட்டு நடிக்க ஆசைப்படுகின்றனர். அந்த வாய்ப்பு சில நடிகைகளுக்கும் கிடைத்துள்ளது.

சினிமாவில் விஜய் உடன் ஜோடி போட்டு நடித்து அஜித்துடன் நடிக்க முடியாமல் தவிக்கும் ஐந்து நடிகைகள் யார் என்பதை பார்ப்போம்.. 1. ஜெனிலியா : ஜெனிலியா என்றாலே நம் மனதிற்கு வருவது சச்சின் திரைப்படம் தான் இந்த படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்துள்ளார் இதில் அவரது கியூட்டான சிரிப்பு ரசிகர்களை கவர்ந்தது இதைத்தொடர்ந்து விஜய் உடன் வேலாயுதம் திரைப்படத்திலும் நடித்த ஜெனிலியாவிற்கு அஜித்துடன் நடிக்க முடியாமல் போனது.

திருமணத்திற்கு பிறகு ஜெனிலியா சுத்தமாக மார்க்கெட்டை இழந்து உள்ளார். அதனால் இனி அவருக்கு அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை.. 2. ஸ்ரேயா சரண் : அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய் உடன் ஜோடி போட்டு நடித்த ஸ்ரேயா அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார் ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை இனியும் அந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை எனக் கூறுகின்றனர்.

3. ஹன்சிகா மோத்வானி : வேலாயுதம், புலி போன்ற படங்களில் விஜய் உடன் ஜோடி போட்டு நடித்த ஹன்சிகா தனது மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்தி குட்டி குஷ்பூ ஆக வலம் வந்தார். அண்மையில் இவர் திருமணம் செய்து கொண்டு கணவருடன் என்ஜாய் செய்து வருகையில் சினிமா வாய்ப்பு இவருக்கு இனி குறையும் என கூறப்படுகிறது.

4. கீர்த்தி சுரேஷ் : சர்க்கார், பைரவா போன்ற படங்களில் விஜய் உடன் சேர்ந்து நடித்த கீர்த்தி சுரேஷ் தற்போதும் பல டாப் ஹீரோக்களின் படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார் ஆனால் இதுவரை அவருக்கு அஜித்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை இனி வரும் காலங்களில் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 5. சமந்தா : விஜய் உடன் தெறி, மெர்சல், கத்தி போன்ற தொடர்ந்து மூன்று படங்களை கொடுத்த சமந்தாவிற்கு அஜித்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை..