தமிழ் சினிமா உலகில் ஒரு படம் ஹிட் அடிக்க எப்படி காமெடி, ஆக்சன், செண்டிமெண்ட், ரொமான்ஸ் போன்ற அனைத்தும் தேவைப்படுகிறதோ அதே போல பாடல்களும் முக்கிய பங்கு வசிக்கிறது பாடல்கள் படம் வெளிவருவதற்கு முன்பாகவே இசை வெளியீட்டு விழா போன்றவற்றின் மூலம் வெளிவந்து விடுகின்றன இதனால் படத்திற்கு முன்பாகவே அந்த பாடல்கள் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி விடுகின்றன. மேலும் சமூக வலைதள பக்கங்களில் இந்த பாடல்கள் பெரிய அளவில் ஹிட் அடிக்கின்றன. அந்த வகையில் யூடியூபில் அதிக கவனத்தை ஈர்த்த ஐந்து தமிழ் பாடல்கள் என்னென்ன என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.
1. குலேபகாவலி : கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் வெளியான குலேபகாவலி படத்தில் இடம்பெற்ற குலேபா என்ற பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆட்டம் போட வைத்தது இந்த பாடல் youtubeபில் சுமார் 29 மில்லியன் பேர் பார்த்து கண்டு களித்துள்ளனர் இது ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
2. நம்ம வீட்டு பிள்ளை : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது இந்த படத்தில் இடம் பெற்றுள்ள காந்த கண்ணழகி பாடல் ரசிகர்களுக்கு பேவரட் பாடலாக இன்று வரையிலும் இருந்து வருகிறது. இந்த பாடல் youtube-ல் 215 மில்லியன் பார்வையாளர்களை கடந்து நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
3. மாஸ்டர் : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி பட்டய கிளப்பிய படம் மாஸ்டர் இந்த படத்தில் இருக்கும் பாடல்கள் அனைத்துமே வெற்றி பாடல்கள் தான் அதிலும் குறிப்பாக வாந்தி கம்மிங் பாடல் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த பாடல் 356 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தது.
4. பீஸ்ட் : நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக அடித்து நொறுக்கிய படம் பீஸ்ட் இந்த படத்தில் இடம் பெற்ற அரபி குத்து பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது இந்தப் பாடல் youtube இல் மட்டும் 386 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
5. மாரி 2 : மாரி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடித்த திரைப்படம் மாரி 2 இந்த படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து சாய் பல்லவி, ரோபோ சங்கர், நிஷா மற்றும் பலர் நடித்திருந்தனர் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ரவுடி பேபி பாடல் youtube-ல் புதிய சாதனை படைத்தது. இதுவரை மட்டுமே இந்த பாடல்களை யூடியூபில் 1.3 பில்லியன் பார்வையாளர்களை கடந்து முதலிடத்தை பிடித்துள்ளது.