தெலுங்கில் முதல் நாளே வசூல் வேட்டையாடிய 5 தமிழ் திரைப்படங்கள்.. துணிவு படத்தை பீட் பண்ணிய வாத்தி

vaathi
vaathi

பிறமொழி படங்கள் எப்படி தமிழ் சினிமாவில் நல்ல வசூலை பார்க்கிறதோ.. அதேபோல தமிழ் நடிகர்களின் படங்களும் அக்கட தேசத்தில் நல்ல வசூலை பார்க்கின்றன அந்த வகையில் சமீபத்தில் வெளியான 5 தமிழ் திரைப்படங்கள் தெலுங்கில் முதல் நாளே நல்ல வசூலை பார்த்துள்ளது  அந்த 5 படங்கள் என்னென்ன என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

1. லவ் டுடே : பிரதீப் ரங்கநாதன் இயக்கம், நடிப்பில் உருவான இந்த திரைப்படம் தமிழில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்றது பின் பிற மொழிகளில் வெளியானது அதன்படி தெலுங்கில் ரிலீஸ் ஆன முதல் நாளே நல்ல விமர்சனத்தை பெற்று வசூலில் ருத்ர தாண்டவம் மாட்டியது. தெலுங்கில் முதல் நாளில் மட்டுமே சுமார் 1.15 கோடி வரை அள்ளியது.

2. துணிவு : கடந்த பொங்கலை முன்னிட்டு அஜித் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் கொண்டாடும் படமாக இருந்தது உலகம் முழுவதும் 260 கோடி வசூலித்தது தெலுங்கில் தெகிம்பு என்ற பெயரில் வெளிவந்தது அங்கேயும் நல்ல வசூல் வேட்டை ஆடியது. முதல் நாளில் மட்டுமே 1.14 கோடி வாரியது.

3. வாத்தி (சார் ) : தனுஷ் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க படிப்பை பற்றிய ஒரு படமாக இருந்தால் ரசிகர்கள் மற்றும் குடும்பம் ரொம்ப பிடித்து போய் தற்போது நல்ல வரவேற்பு பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது வாத்தி திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நேற்று வெளியானது தெலுங்கில் மட்டுமே முதல் நாளில் சுமார் 2.65 கோடி வசூல் செய்துள்ளது.

4. பொன்னியின் செல்வன் 1 : மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. தெலுங்கில் ரீலிஸ் செய்யப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில் மட்டுமே 2.88 கோடி வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

5. வாரிசு ( வாரிசுடு) : வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் உலகம் முழுவதும்  300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி குவித்தது தெலுங்கிலும் இந்த படத்தின் வரவேற்பு நன்றாக இருந்ததால் முதல் நாளே அங்கு 3.10 கோடி வசூலித்த சாதனை படைத்தது.