2022 – வெளிநாட்டில் அதிக வசூல் வேட்டையாடிய 5 தமிழ் திரைப்படங்கள்..! விஜய் படத்துக்கு இரண்டாவது இடம்.

kamal
kamal

தமிழ் சினிமா உலகில் அண்மையில் வெளிவரும் படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாக மாறுகின்றன அந்த வகையில் இந்த வருடத்தில் பிரம்மாண்டமான வெற்றியை ருசித்த படங்கள் என்னென்ன என்பதும் வெளிநாட்டில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் எது என்பது குறித்து விலாவாரியாக பார்க்க இருக்கிறோம்.

இந்த வருடத்தில் டாப் நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் வசூல் ரீதியாக வெற்றி அடைந்துள்ளது அதிலும் குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் சரி வசூல் ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படம் ஒட்டுமொத்தமாக சுமார் 420 கோடிக்கு மேல் வசூல் அள்ளி..

புதிய சாதனை படைத்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து இந்த வருடத்தில் அஜித்தின் வலிமை, விஜயின் பீஸ்ட் ஆகிய படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது இந்த படங்கள் இரண்டும் 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த வருடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்திருந்தாலும் வெளிநாட்டில் எந்த படம் அதிக வசூலை அள்ளியது என்பது குறித்துதான் நாம் பார்க்க இருக்கிறோம் அதன்படி பார்க்கையில் இந்த வருடத்தில் வெளியாகி வெளிநாட்டில் அதிக வசூலை அள்ளிய திரைப்படத்தில் முதல் இடத்தை பிடித்திருப்பது கமலின் விக்ரம் திரைப்படம் தான் $ – 3.12 மில்லியன் டாலர், விஜயின் பீஸ்ட் திரைப்படம்  $ – 822K,

அஜித்தின் வலிமை திரைப்படம்  $ – 705K, சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் $ – 377K, தனுஷின் திருச்சிற்றம்பலம் $ – 275K டாலர் இந்த ஐந்து படங்கள் தான் வெளிநாட்டில் அதிகம் வசூல் வேட்டை நடத்திய திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தீயாய் பரவி வருகிறது.