தமிழில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியாகும் டாப் ஹீரோ படங்கள் இந்தியாவையும் தாண்டி வெளி நாடுகளிலும் நல்ல வசூலை அள்ளுகின்றன அந்த வகையில் அமெரிக்காவில் அதிக வசூல் செய்த 5 தமிழ் திரைப்படங்கள் குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. இந்த லிஸ்ட்டில் அஜித், விஜய் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2.0 : பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் 2.0 அமெரிக்காவில் மட்டும் $ 5,509317 மில்லியன் வசூல் செய்தது.
பொன்னியின் செல்வன் : மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது முதல் பாகம் மக்கள் மத்தியில் சக்க போடு போட்டது அமெரிக்காவில் மட்டும் $ 5.54 மில்லியன் வசூல் செய்தது.
கபாலி : பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க தன்னுடன் இருக்கும் மக்களை காப்பாற்ற ரஜினி போராடுவார் படம் ஆக்சன், எமோஷனல் கலந்திருந்ததால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதிக நாட்கள் ஓடியதோடு வசூல் ரீதியாக வெற்றி பெற்றது அமெரிக்காவில் மட்டும் 4,585,808மில்லியன் வசூல் செய்தது.
நீங்க ரெண்டு பேரும் லவ்வரா ஓப்பனாக கேட்ட விசித்ரா.. மழுப்பிய ஜோடி.!
விக்ரம் : கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் 2022-ல் வெளிவந்து சக்கபோடு போட்ட திரைப்படம் இது.. முழுக்க முழுக்க போதை பொருள் கும்பலை ஒழிக்கும் கதையாக இது இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடியது. அமெரிக்காவில் மட்டும் 2,858,359 மில்லியன் வசூல் செய்தது.
பேட்ட : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் பேட்ட.. முழுக்க முழுக்க எமோஷனல் மற்றும் ஆக்சன் பேக் திரைப்படமாக இருந்ததால் பெரியவர்களின் முதல் சிறியவர்கள் வரை இந்த படத்தை பார்த்து கொண்டாடினர் பெரிய வசூலை அள்ளியது அமெரிக்காவில் மட்டும் 2,553,065 வசூல் செய்தது.