2022 -ல் திருமணம் செய்து கொண்ட 5 நட்சத்திர ஜோடிகள்.! காதலித்து விக்கியை கரம் பிடித்த நயன்தாரா..

nayanthara
nayanthara

2022 ஆம் ஆண்டு நடிகர், நடிகைகளுக்கு நல்ல ஆண்டாக அமைந்திருக்கிறது ஆம் இந்த ஆண்டில் வெளிவந்த தமிழ் படங்கள் பெரிதும் வெற்றி பெற்று இருக்கின்றன மேலும் சினிமா நடிகர், நடிகைகள்  திருமணம் செய்து கொண்டும் அசத்தி இருக்கின்றனர் அந்த வகையில் 2022-ல் திருமணம் செய்து கொண்ட 5 ஜோடிகள் பற்றி தான் தற்பொழுது பார்க்க இருக்கிறோம்..

1. விக்கி – நயன்தாரா : நானும் ரவுடிதான் திரைப்படத்தின் பொழுது விக்கியும் நயன்தாராவும் காதல் வயப்பட்டனர் பிறகு இருவரும் 7  வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்தனர் ஒரு வழியாக கடந்த ஜூன் ஒன்பதாம் மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர் இவர்களது திருமணத்திற்கு உறவினர்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினார் இவர்களது திருமணம் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் வைரலானது. இவர்களது திருமண நாளில் ஒரு லட்சம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கி அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

2. ஆதி – நிக்கி கல்ராணி : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபலங்களான இவர்கள் மரகத நாணயம் திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். தொடர்ந்து காதலித்து வந்த இந்த ஜோடி ஒரு வழியாக திருமணம் செய்து கொண்டது அதன் பிறகு இந்த ஜோடி ஹனிமூன காக பல முக்கிய இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டது அது சோசியல் மீடியாவில் வைரலானது.

3. ஹரிஷ் – கல்யாண் நர்மதா : தமிழ் சினிமாவில் வளர்ந்து நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண் இவர் வெள்ளி திரையும் தாண்டி சின்னத்திரையிலும் பலவற்றில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திடீரென திருமணம் செய்து கொண்டது இணையதள பக்கத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

4. கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன்  :  இவர்கள் இருவரும் தேவராட்டம் திரைப்படத்தில் நடித்தனர் அப்பொழுது நல்ல பழக்கம் ஏற்பட பின் காதலாக மாறியது. பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண புகைப்படம் இணையதள பக்கத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

6. ஹன்சிகா – சோஹாலி கதூரியா :   சினிமா நடிகைகள் பெரும்பாலும் 35 வயதை தாண்டிய பிறகு தான் திருமணம் செய்து கொள்வார்கள் ஆனால் நடிகை ஹன்சிகா 30 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். இவர் தனது நண்பரும்,  தொழிலதிபருமான சோஹாலி கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் திருமணம் ஜெய்பூரில் உள்ள பழைய அரண்மனையில் அரங்கேறியது. இவர்களது திருமண உணவு அரண்மனையை சுற்றி இருக்கும் பல ஆதரவற்றாக குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது மேலும் இந்தியா முழுவதும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவுகளை வழங்கினார் ஹன்சிகா.