ஒரே முக ஜாடையில் இருக்கும் 5 நடிகைகளை பற்றி நாம் இப்பொழுது விலாவாரியாக பார்ப்போம்..
1. காஜல் அகர்வால் – பிரணிதா : இருவருமே தெனிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகைகள்.. இருவருக்குமே கண்ணு, முகமும் ஒரே ஜாடையாக தான் இருக்கும் பிரணிதா தமிழில் சகுனி மற்றும் பல படங்களில் நடித்துள்ளார். காஜல் அகர்வால் பற்றி சொல்லவே தேவையில்லை தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து உள்ளார் தற்பொழுது கூட இந்தியன் 2 திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
2. ரீமா சென் – திரிஷா : தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளாக வரும் இருவருக்கும் முகபாவனை சற்று ஒத்துப்போகும், உடம்பை செம்ம ஸ்லிம்மாக மெயின்டன் பண்ணக்கூடியவர்கள் மற்றும் இவர்களுடைய நடிப்பும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் இதனாலேயே இரண்டு நடிகைகளின் படங்களை மாறி மாறி பார்த்து புலம்பி கொள்வார்கள்.
3. சமந்தா – சம்யுக்தா : இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கக் கூடியவர்கள் சமந்தா வந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சம்யுக்தா திரை உலகிற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வாத்தி படத்தில் இவருடைய நடிப்பை பார்த்த பலரும் சமந்தா போலவே இருக்கிறது என கூறினர்.
4. சித்து இத்னானி – பிந்து மாதவி : இருவம் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருபார்கள் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தில் சிது இத்தானி நடித்திருப்பார் இவருடைய நடிப்பை பார்த்த பலரும் பிந்து மாதவி தான் என பலரும் ஒரு செகண்ட் யோசித்தனர்.
5. அசின் – பூர்ணா : இவருடைய முக ஜாடையும் ஒரே மாதிரியாக இருக்கும் விஜய் கூட ஒரு பேட்டியில் அசினும் நீங்களும் பாக்குறதுக்கு ஒரே மாதிரியாக இருப்பதாக கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.