உலகில் உச்ச நட்சத்திர நடிகர்கள் ஒரு படத்தை ஹிட் படமாக கொடுத்துவிட்டால் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்துகின்றனர் ஆனால் அவர்களையும் தாண்டி வளர்ந்து வரும் நடிகர்கள் மற்றும் காமெடியன்கள் கூட அண்மையில் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளனர் அப்படி அண்மையில் சம்பளத்தை உயர்த்திய ஐந்து நடிகர்கள் குறித்து பார்ப்போம்..
1. நடிகர் விஷால் தற்போது பெரிய அளவில் வெற்றி படங்களை கொடுக்கவில்லை என்றாலும் சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து நடித்து வருகிறார் அந்த வகையில் அவரது கையில் லத்தி சார்ஜ், மார்க் ஆண்டனி போன்ற படங்கள் இருக்கின்றன இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் விஷால் நடிக்க இருக்கிறாராம் அதுவும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதால் 25 கோடி கிட்டத்தட்ட சம்பளம் கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
2. நடிகர் ஆர்யா ஒரு படம் மிகப்பெரிய வெற்றி படமாக கொடுத்தால் அடுத்த இரண்டு திரைப்படங்கள் சுமாரான வெற்றியை பெறுகின்றன இப்படி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கும் இவர் தற்பொழுது தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார் ஆம் இப்பொழுது ஒரு படத்திற்கு 15 கோடிக்கு மேல் சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.
3. வைகைப்புயல் வடிவேலு ரீ என்ட்ரி கொடுத்து தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இப்பொழுது அவர் கையில் ஐந்தாறு திரைப்படங்கள் இருக்கின்றன பிஸியான நபராக இருக்கும் இவர் 30 நாள் கால்ஷீட்க்கு 5 கோடி சம்பளம் கேட்கிறாராம்..
4. தமிழ் சினிமா உலகில் ஹீரோ வில்லனாக நடித்து ஓடிக் கொண்டிருப்பவர் எஸ் ஜே சூர்யா இவர் கடைசியாக வில்லனாக நடித்த மாநாடு, டான் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு பிறகு தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார் தற்பொழுது ஒரு படத்தில் நடிக்க அவர் 20 கோடி சம்பளம் கேட்கிறார்.
5. ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வரும் சிம்பு தொடர்ந்து மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய வெற்றி படங்களை கொடுத்த பிறகு தொடர்ந்து பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்து வருகிறார் இதனை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்கு வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட பல கோடி ரூபாய் அதிகமாக கேட்டு இருக்கிறாராம்.