பொதுவாக சினிமாவில் நடிக்கும் பிரபலங்களுக்குல் காதல் ஏற்படுவது வழக்கமானதுதான் அந்த வகையில் பின்னர் அவை திருமணத்தில் முடிந்து விடுகிறது அந்த வகையில் வெகு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் மற்ற பிரபலங்கள் இந்த ஆண்டு யார் யார் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இவர்கள் கோலிவுட்டில் மிகப் பிரபலமான நட்சத்திரங்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் இந்நிலையில் நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என போற்றப் படுகிறார்கள். இவ்வாறு பிரபலமான நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்த நிலையில் வருகின்ற ஜூன் 9ஆம் தேதி என கூறப்பட்டுள்ளது.
பிரியா பவானி சங்கர் ராஜவேல் இவர்கள் இருவருமே வெகுநாளாக காதலில் ஈடு பட்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் சமீபத்தில் இவர்களுக்குள் பிரேக்கப் ஆனது என தெரியவந்த நிலையில் அது வதந்தி தான் என ராஜ் வேலுடன் இருக்கும் புகைப்படத்தை பிரியா பவானி சங்கர் இணையத்தில் வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரியவந்துள்ளது.
நடிகர் வினை வெகுநாட்களாக விமலாராமன் என்பவரை காதலித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் விடுமுறை நாட்களில் வெளிநாடு செல்வது அங்கு புகைப்படம் எடுத்துக்கொண்டு சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவது என்று தொடர்ந்து செய்து கொண்டிருந்த நிலையில் இவர்களுக்கு மிக விரைவாக இந்த ஆண்டு திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
நடிகர் முகேன் ராவ் இவர் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆவார் அதுமட்டுமில்லாமல் இவர் சிறந்த பாடகர் மற்றும் இந்தி நடிகரும் கூட அந்த வகையில் இவர் யாஸ்மின் நதியா என்பவரை வெகுநாளாக காதலித்து வந்தார் இந்நிலையில் இவர்களுக்கு இருவருக்கும் இந்த ஆண்டு திருமணம் செய்ய உள்ளார்கள்.
விஜய பிரபாகரன் கேப்டன் விஜயகாந்தின் மகன் ஆவார் இவர் கீர்த்தனா என்ற பெண்ணை காதல் செய்து வந்ததும் தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்றது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆனால் விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த திருமணம் தள்ளிப் போன நிலையில் தற்போது இந்த ஆண்டு நடக்க உள்ளது.