Rajini : தமிழ் சினிமாவில் இன்று டாப் நடிகராக வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார் படம் நாளை கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் ரஜினி நடிப்பில் வெளிவந்து அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள் குறித்து தான் நாம் பார்க்க இருக்கிறோம்..
தர்பார் : ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக இருந்தது. வில்லன்கள் ரஜினி மகளை கொன்று விடுவார்கள் போலீசாக இருக்கும் ரஜினி அவர்களை தேடி பிடித்து போய் கொள்வார் இதுதான் படத்தின் கதை. படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பற்றி இருந்த பொழுதிலும் உலகம் முழுவதும் 200 குடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றி கண்டது.
பேட்ட : கடந்த சில வருடங்களாக இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அந்தவகையில் கார்த்திக் சுப்புராஜ் உடன் கைகோர்த்து ரஜினி நடித்த இந்த திரைப்படம் முழுக்க முழுக்க மிகப்பெரிய ஆக்சன் படமாக உருவாகியது படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதீன், பாபி சிம்ஹா, சசிகுமார், திரிஷா, மாளவிகா மோகனன் மற்றும் பல திரைப்பட்டாளங்கள் நடித்திருந்தனர் படம் வெளிவந்து 230 கோடி வசூல் அள்ளி வெற்றி கண்டது.
கபாலி : மலேசியாவில் வாழும் தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட ஒரு படமாக இது இருந்தது படம் முழுக்க முழுக்க ஆக்சன் தான் ரஜினி இந்த படத்தில் செம மாஸ் ஆக இருப்பார் படம் வெளிவந்து 286 கோடி வசூல் செய்தது.
எந்திரன் : ரோபோ சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டினார் படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று 290 கோடி வசூல் செய்து அசத்தியது.
2.0 : எந்திரன் படத்தை தொடர்ந்து சில வருடங்கள் கழித்து 2.0 என்ற பெயரில் படம் உருவானது. சமூகத்திற்கு தேவையான மெசேஜ்கள் கலந்து ஒரு படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று அதிக நாட்கள் ஓடியது. 800 கோடி ரூபாய் வசூல் செய்து அசத்தியது.