இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி வீரருக்கு போனவர்கள் வெகுகுறைவு ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ரோஹித் சர்மா. சில பந்துகளை நிதானமாக கையாண்டு பின் அதிரடியை காட்டக் கூடியவர் ஆனால் இவருக்கு முன்பாக இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக இருந்த சேவாக் முதல் பந்திலேயே சிக்சர், பவுண்டரிகளை அடித்து எதிரணி வீரர்களை ஆட்டம் காண வைத்தார்.
அந்த அளவிற்கு திறமை வாய்ந்தவராக இருந்தவர் இவர் சச்சினுடன் இணைந்து விளையாண்டால் இவருக்கு பேரும் புகழும் அப்போதைய காலகட்டத்தில் கிடைத்தன. சச்சின் பந்தை நிதானமாக பந்தை பார்த்து அடிப்பார் ஆனால் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் அதற்கு எதிர்மாறான எண்ணம் கொண்டவர். பந்தை எந்த திசையில் வேண்டுமானாலும் சிக்ஸருக்கும், பவுண்டருக்கு அடிப்பார்..
இதனால் எதிரணி வீரர்கள் சேவாக்கை பார்த்து பயந்தனர். ஆரம்பத்திலேயே சேவாக் அதிரடி காட்டுவதால் பந்துவீச்சாளர்களுக்கு முதலிலேயே நிலைகுலைந்து போய் ஒரு கட்டத்தில் பயப்பட ஆரம்பித்தனர்.
அதிரடிக்கு பெயர் போன சேவாக் வாய் வார்த்தையிலும் சரியாக பேச வில்லை என்றால் அதிலும் அதிரடி காட்டுவார் அப்படி அவரிடம் பேசி மொக்கை வாங்கிய 5 பிரபலங்களை பற்றி தற்போது பார்ப்போம்.
1. பத்திரிக்கையாளரை வச்சி செய்த சேவாக். ஒருமுறை பத்திரிக்கையாளர் ஒருவர் சேவாக்கை பார்த்து நீங்கள் மிக அருமையாக விளையாடுகிறீர்கள் ஆனால் சச்சின் போலவே உங்களது ஆட்டம் இருக்கிறது நீங்கள் அவரில் ஒருவரா என கேட்டனர்.அதற்கு பதிலளித்த வேந்தர் ஷேவாக் “சச்சின் ஒரு பேங்க் பேலன்ஸ்” என்று பதில் அளித்து பத்திரிக்கையாளரை கலாய்த்தார்.
2. கிரிக்கெட்டில் வர்ணனையாளராக இருக்கும் ஹர்ஷா போக்கிலே சேவாக்கிடம் ஒரு முறை சில கேள்விகளை கேட்டார்.நீங்கள் எப்படி பந்துகளை பயப்படாமல் பவுண்டரியும் சிக்ஸராக அடிக்கிறீர்கள் என கேட்டார் அதற்கு அவர் நான் பந்தை பார்த்து மட்டும்தான் அடிக்கிறேன் என தனது பாணியில் மிரட்டலாக பதில் கொடுத்தார்.
3. கவுன்டி கிரிக்கெட் விளையாடுவது வழக்கம் அப்பொழுது ஒரு முறை பாகிஸ்தான் அணி வீரர் அப்துல் ரசாக் பழைய பந்தியிலும் மிக அருமையாக ஸ்விங் செய்து எதிரணி வீரர்களை நிலைகுலையச் செய்தார் அப்பொழுது களத்திற்கு வந்த ஷேவாக்கிடமும் எதிரே இருந்த வீரர் நீங்கள் சற்று பொறுமையாக விளையாடுங்கள் ஏனென்றால் பந்து ஸ்விங் ஆகி வருகிறது எனக் கூறினார்.
அதற்கு ஷேவாக் மௌனமாக இருந்து பந்தை எதிர்கொண்டார் முதல் பந்தையே சிக்ஸர் விளாசி அப்துல் ரசாக்கை ஆச்சரியப்படுத்தினார் மேலும் எதிரே இருந்த வீரர் இனி பயப்படாமல் விளையாடலாம் என கூறினார்.
4. கிரிக்கெட்டில் வர்ணனையாளராக இருக்கும் மைக்கல் ஆர்தர் ஒருமுறை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சில டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது அப்போது ஒரு போட்டியில் சேவாக் 195 ரன்கள் எடுத்து விளாசினார் இதுகுறித்து பேசிய மைக்கல் ஆர்தர் இன்னும் சிறிது நேரம் தாக்குப் பிடித்து இருந்தால் நீங்கள் 200 ரன்னை எட்டி இருக்கலாம் என கூறினார் அதற்கு பதிலளித்த சேவாக் 3 அடியில் 6 ரன்களை மிஸ் செய்து விட்டேன் என்றுதான் கூறினார்.