கிரிக்கெட் விளையாடும் போது மைதானத்திலேயே இறந்துபோன 5 வீரர்கள்.! காரணம் தெரிந்தால் ஷாக் ஆவிங்க.

cricket

கிரிக்கெட் வரலாற்றில் அதிகம் சந்தோஷமான விஷயங்கள் மற்றும் சோகமான விஷயங்களும் கலந்து இருக்கும். அதில் நடந்த அதிர்ச்சியான ஐந்து சம்பவங்களை பற்றி நாம் பார்க்க இருக்கிறோம்.

ராமன் லம்பா 1980களில் ரஞ்சி கோப்பை தொடர்களின் மூலமாக தனது கிரிக்கெட் வாழ்க்கையை இந்திய அணிக்காக துவங்கி 1998 வரை பல கிரிக்கெட் தொடரில் தனது திறமையை காட்டி உள்ளார். இவர் பங்கேற்றுக் கொண்ட இறுதிப் போட்டியானது பங்களாதேஷில் நடைபெற்றது அப்போது இந்திய அணி வெற்றி பெறக்கூடிய வேண்டிய நிலையில் இருந்ததால் உற்சாகத்தில் கடைசி ஓவரில்  அவர்கள் தனது ஹெல்மெட்டை அணிய மறுத்து விட்டார் அருகில் இருந்தவர்கள் எவ்வளவு கூறியும் அவர் ஹெல்மெட்டை அனியவில்லை சரியாக மூன்று பந்துகள் மீதமுள்ள நிலையில் மெஹராப் ஹோசைன் என்ற பங்களாதேஷ் வீரர் பந்து வீசிய பந்து ரம்பாவின் வலப்புற கீழ் நெற்றியில் பட சிறிது நேரத்தில் தலையின் உட்பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட கோமா நிலைக்கு சென்றார். உடனடியாக போஸ்ட் கிராஜுவேட் என்ற மருத்துவமனையில் சேர்த்து  தலைசிறந்த நரம்பியல் மருத்துவரை அழைத்து சிகிச்சை அளித்தார்கள் ஆனால் சிகிச்சை பலனின்றி மூன்றாவது நாளில் இவர் உயிரிழந்தார்.

அப்துல் அஸிஸ் பாகிஸ்தான் வீரரான இவர் அணியில் விக்கெட் கீப்பராகவும் ஓபனிங் பேட்ஸ்மேனாகவும் இருந்தார். இவர் கிரிக்கெட் வீரராகவும் இல்லாமல் 1959இல் எஸ் எம் என்ற கல்லூரியின் மாணவராகவும் அதே சமயத்தில் ஸ்டேட் பேங்கில் பணியாளராகவும் இருந்தார். உள் நாட்டிற்கு இடையே நடந்த கிரிக்கெட் மேட்ச்  ஆசிஸ் துவக்க வீச்சாளராக களமிறங்கினார் முஹம்மத் தவான் என்ற பந்துவீச்சாளர் வீசிய பந்தானது எதிர்பாராத விதமாக ஆஸிஸ்சின் இதயப்பகுதியில் அதிவேகமாக பட சற்றும் எதிர்பாராத நிலையில் மயங்கி விழுந்த நிலையில் இறந்து விட்டார். இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் அவர் இறந்தபோது  18 வயது மட்டுமே நிரம்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டேர்ரின் ராண்டால் இவர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வலதுகை ஆட்டக்காரர் ஆவார் விக்கெட் கீப்பராகவும் தனது கிரிக்கெட் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வந்தார். 2009 மற்றும் 2010 ஆண்டுகளில் தனது நாட்டிற்காக சிறந்த ஆட்டத்தினை காட்டியுள்ளார் 2013ஆம் ஆண்டு பார்டர் கிரிக்கெட் போர்ட் பிரீமியர் லீக் என்ற தொடரின் போது வேகமாக வீசப்பட்ட பந்தானது இவரது தலையில் மோசமாக தாக்கியதால் மைதானத்திலேயே உயிரை விட்டார். அந்த சமயத்தில் டேர்ரின் ஹெல்மெட் அணிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பில்லிப் ஹக்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட வரும் போது இவரது வயது 20 மட்டுமே நிரம்பியிருந்தது. 2009 ஆம் ஆண்டு டெஸ்ட் மேட்ச் களமிறங்கிய இவர் 2013ஆம் ஆண்டு ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கினார் 2009 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் சதம் அடித்து தனது திறமையை பதிவு செய்தார்.

அதன் பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு முக்கிய ஆட்டக்காரராக வலம் வந்தார் 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா உள்நாட்டு மாநிலங்களுக்கு இடையே நடந்த சபெல் ஹில் என்ற தொடரில் சவுத் ஆஸ்திரேலியா மாநிலத்திற்காக விளையாடிக் கொண்டிருந்தார் ஒரு மதிய வேலை ஆட்டத்தில் 63 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் விளையாடிக் கொண்டிருந்தார் சேன் போர்ட் என்ற எதிரணி பந்துவீச்சாளர் இன் பந்தை அடிக்க முற்பட்ட போது எதிர்பாராமல் இடது கழுத்து மற்றும் காது பகுதியில் அதிவேகமாக பட்டது இதில் பிலிப் ஹியூக் மயக்கம் அடைந்ததால் உடனடியாக அன்று ஆட்டம் ரத்து செய்யப்பட்டு ப்ளீஸ் கியூக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் சிகிச்சை பலனின்றி மூன்று நாட்களில் அவர் இயற்கை எழுதியதாக மருத்துவமனை அறிவித்தது.

philip hughes
philip hughes

ரேமோண்ட் வேன் ஸ்கூர் நபிமியா நாட்டின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருந்த இவர் 200க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 17 வயதில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய இவர் நபிமியா அணியிற்கு 40 முறை கேப்டனாக இருந்துள்ளார். மேலும் ஐசிசி இன்டெர்கோன்டிநீண்டல் கப் என்ற ஆப்பிரிக்க கண்டத்திற்குள் நடைபெறும் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இறுதியாக 2015ஆம் ஆண்டு நடந்த போட்டி ஒன்றில் பேட்டிங் செய்து கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மைதானத்திலேயே உயிரை விட்டார்.