விசேஷ நாட்களில் அதிகம் டாப் நடிகர்களின் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வசூலை அள்ளுகின்றன. அப்படி அடுத்த வருடம் பொங்கலுக்கும் சில முக்கிய நடிகர்களின் படங்கள் வெளிவந்து மோத உள்ளன. என்னென்ன படங்கள் என்பதை குறித்து பார்ப்போம். வாரிசு : விஜய் நடிப்பில் கடைசியாக பீஸ்ட் படம் வெளியாகியது. இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது விஜய் வம்சியுடன் கைகோர்த்து வாரிசு எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகின்ற நிலையில் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏ கே 61: ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படம் பேங்க் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வருகிறது அதனால் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இடம்பெறும் என கூறப்படுகிறது.
இந்த படத்தை முதலில் தீபாவளிக்கு வெளியிடப்படகுழு திட்டமிட்டுள்ளதை அடுத்து படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாத காரணத்தினால் பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜயின் வாரிசு படத்துடன் அஜித் படம் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹரிஹர வீர மல்லு : இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் பவன் கல்யாண் மற்றும் நிதி அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் போன்ற பல மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த படம் அஜித் விஜய்யின் படங்களுக்கு நிகராக டப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போலா ஷங்கர் : தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த வேதாளம் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு போலா ஷங்கர் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ், தமன்னா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படமும் பொங்கல் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. ஆதி புருஷ் : ஓம் ராவது இயக்கத்தில் பிரபாஸ், சையஃப் அலிகான், கீர்த்தி சனோன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் ராமாயண கதையை வைத்து எடுக்கப்பட்டது. இந்த படத்தினை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய உள்ளனர்.