அண்மையில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த 5 திரைப்படங்கள்.! 16 கோடி போட்டு 400 கோடி எடுத்த திரைப்படம்

vijay
vijay

சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பதால் படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூலில் புதிய சாதனை படைக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி 300 கோடியை தொட்ட ஐந்து திரைப்படங்களை குறித்து தான் நாம் விலா வாரியாக பார்க்க இருக்கிறோம்..

1. கே ஜி எஃப் 2 : பிரசாந்த் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் முதல் பாகம் மிகப் பிரம்மாண்டமான வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது இதிலேயும் தங்க சுரங்கத்தை பற்றி பெரிய அளவில் காட்டி இருந்தனர் படம் மாஸ் ஆக்சன் சென்டிமென்ட் அனைத்தும் அற்புதமாக இருந்ததால்.

இந்த படத்தையும் ஆரம்பத்திலேயே ரசிகர்களும் மக்களும் கூட்டம் கூட்டமாக பார்த்தனர் அதன் விளைவாக கேஜிஎப் 2 திரைப்படத்தின் வசூலும் பட்டையை கிளப்பியது. இந்த திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது இதனைத் தொடர்ந்து கேஜிஎப் மூன்றாவது பாகமும் எடுக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2. விக்ரம் : நான்கு வருடங்களுக்கு பிறகு உலகநாயகன் கமலஹாசன் லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து நடித்த திரைப்படம் தான் விக்ரம் படம் முழுக்க முழுக்க போதை பொருளை மையமாக வைத்தே எடுக்கப்பட்டிருந்தது. படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று இந்தியா முழுவதும் அதிக வசூல் பெற்றது அதன் காரணமாக வசூலில் புதிய உச்சத்தை தொட்டு உள்ளது ஆம் இந்த திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.

3. பொன்னியின் செல்வன் : கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த படம் உருவானது இதை இரண்டு பாகங்களாக பட குழு ரிலீஸ் செய்ய கணக்கு போட்டது அதன்படி முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவந்தது இதுவரை கதையாக படித்து வந்தவர்கள் படமாக பார்த்தனர் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால் கொண்டாடினர். உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது இதன் இரண்டாவது பாகம் வெகு விரைவிலேயே ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.

4. கந்தாரா : ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த திரைப்படம் முழுக்க முழுக்க தெய்வ நம்பிக்கையை மையமாக வைத்து படத்தின் ஒவ்வொரு சீனும் மிக அற்புதமாக இருந்ததால் கன்னட சினிமாவையும் தாண்டி பிறமொழி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது 16 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

5. வாரிசு : தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தளபதி விஜய் நடித்த திரைப்படம் தான் வாரிசு. இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் கதையாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்பங்களையும் கவர்ந்திழுத்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் தொடர்ந்து வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை ஆம் மூன்றே வாரத்தில் 300 கோடி அள்ளி புதிய சாதனை படைத்திருக்கிறது இன்னமும் பல்வேறு இடங்களில் வசூல் அள்ளிக்கொண்டு தான் வருகிறது.
இந்த ஐந்து திரைப்படங்கள் தான் சமீபத்தில் 300 கோடியை தொட்ட திரைப்படங்களாகும்..