ஜில்லா கலெக்டர் முதல் ஐ வரை ரஜினி தவறவிட்ட 5 திரைப்படங்கள்.!

Rajini : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தலைவர் 170 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படிப்பட்ட ரஜினி பாதி படங்களில் நடித்தும் நடிக்காமல் போன சில படங்கள் டிராப்பாகி இருக்கிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

ஆர்பி உதயகுமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான எஜமான் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரது இயக்கத்தில் ரஜினியும் “ஜில்லா கலெக்டர்” என்ற திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. பூஜை எல்லாம் போடப்பட்டது ஆனால் பட்ஜெட் அளவுக்கு அதிகமாக சென்றதால் அந்த படம் டிராப் செய்யப்பட்டது.

கே எஸ் ரவிக்குமார் ரஜினி நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான்.. கே எஸ் ரவிக்குமார் “ஜக்குபாய்” படத்தில் ரஜினி நடிக்க இருந்தார் அதற்கான போஸ்டர் எல்லாம் வெளியாகி சில காரணங்களால் அந்த படம் டிராப்பானது பிறகு ஜக்குபாய் படத்தில் சரத்குமார் நடித்து அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

“சுல்தான் தி வாரி” படத்தில் ரஜினி நடிக்க இருந்தார். அந்த படத்தை அவருடைய மகள் சௌந்தர்யா இயக்க இருந்தது ஆனால் அனிமேஷன் முறையில் உருவாக்க இருந்ததால் இந்த படம் டிராப் செய்யப்பட்டது.

ரஜினி ஷங்கர் உடன் கைக்கோர்த்து நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான். ஆனால் ஷங்கரின் சில படங்களை ரஜினி நிராகரித்தும் உள்ளார் அப்படி முதல்வன் திரைப்படத்தில் ரஜினி நடிக்க வைக்க ஷங்கர் திட்டமிட்டு இருந்தார் ஆனால் அரசியல் பின்னணியில் இருந்த காரணத்தினால் ரஜினி அந்த படத்தில் நடிக்க தயங்கினார் பிறகு அர்ஜுன் நடித்த வெற்றி கண்டது.

ஷங்கரின் ஐ படத்தில் விக்ரம் நடித்து அசத்தினார் ஆனால் இந்த படத்தில் ரஜினி தான் முதலில் நடிக்க இருந்ததாம் ஆனால் இந்த படத்திற்காக உடல் எடையை வருத்தி நடிக்க வேண்டும் என்பதால் ரஜினி இந்த படத்தில் நடிக்கவில்லையாம்.

Exit mobile version