சினிமா தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை டாப்பில் உட்கார வைத்த 5 திரைப்படங்கள்.! எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா.?

sun pictures
sun pictures

தமிழ் சினிமாவிற்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் திரைப்படங்கள் வெளியாகி மக்களை மகிழ்விக்கின்றன அதிலும் ஒருசில திரைப்படங்கள் மக்களை மகிழ்விப்பதையும் தாண்டி வசூலிலும் வாரிக் குவிக்கின்றன.

அந்த வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வருடத்திற்கு நான்கைந்து திரைப்படங்களை மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்கி வெற்றி காண்கிறது.

ரஜினிகாந்தை வைத்து எந்திரன் என்ற திரைப்படத்தை மாபெரும் பொருட்செலவில் தயாரித்து வெற்றி கண்டது.

கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிலிருந்து பல டாப் நடிகர்கள் படங்களை தயாரித்து தற்போது வரையிலும் வெற்றி கண்டு வருகிறது.

ஏதேனும் ஒரு கட்டத்தில் சினிமாவில் படங்களை தயாரிக்காமல் சில ஆண்டுகள் இருந்த நிலையில் மீண்டும் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படத்தை  தயாரித்து மீண்டும் வெற்றி கண்டது.

இந்த நிறுவனம் தொடர்ந்து தற்போது பல படங்களை எடுத்து வருகிறது அந்த வகையில் தளபதி விஜயின் 65 மற்றும் ரஜினியின் அண்ணாத்த, தனுஷின் 44, சூர்யா 40 போன்ற டாப் நடிகர்களை வைத்து எடுத்து வருகிறது.

ஆனால் இடையில் இந்த நிறுவனம் தயாரிக்காமல் விநியோகம் செய்யும் வேலையையும் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் குறைந்த திரைப்படங்களை தயாரித்த இருந்தாலும் அதன் படங்கள் ஒவ்வொன்றும் அவர்கள் நல்ல லாபத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளன.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது டாப்-5 படங்களின் வசூல் நிலவரம் இதோ.

  1. எந்திரன் 290 கோடி, 2. சர்க்கார் 252 கோடி, 3. பேட்ட 220 கோடி 4. காஞ்சனா-3 130 கோடி, 5. நம்ம வீட்டு பிள்ளை 74 கோடி.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான எந்த படமும் தோல்வி அடைந்ததில்லை.