தமிழ் சினிமாவில் பல்வேறு வித விதமான கதை அம்சம் கொண்ட திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது அந்த வகையில் ஒரு சில திரைப்படங்களை பார்த்தால் மட்டுமே ரசிகர்கள் கண்ணீருடன் தியேட்டரில் இருந்து வெளியேறுவார்கள் அந்த திரைப்படங்களைப் பற்றி பார்க்கலாம் வாங்க.
விண்ணை தாண்டி வருவாயா இந்த திரைப்படமானது காதல் கதையை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படம் ஆகும் மேலும் இந்த திரைப்படத்தில் ரசிக்கப்பட்ட கதாபாத்திரம் என்றால் அது கார்த்திக் மற்றும் ஜெசி ஆகியோரின் கதாபாத்திரம் தான் ஆனால் இவர்கள் கடைசியில் பிறந்து விடுவார்கள்.
கத்தி திரைப்படம் ஆனது விஜய் நடிப்பில் வெளியான திரைப்படமாகும் இந்த திரைப்படம் அதிக அளவு ரசிகர்களை ரசிக்க வைத்தாலும் பல்வேறு சர்ச்சையை சந்தித்தது இந்த திரைப்படம் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் ரசிகர்கள் பலரும் கண்ணீருடன் தான் தியேட்டரில் இருந்து வெளியேறினார்கள் மேலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற யார் பெற்ற மகனோ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமானது.
இயற்கை திரைப்படம் ஆனது ஷாம் நடிப்பில் வெளியான திரைப்படமாகும் இந்த திரைப்படம் பலரையும் கதற வைத்த திரைப்படம் என்றே சொல்லலாம் மேலும் இந்த திரைப்படத்திற்காக எந்த ஒரு செட்டும் அமைக்கப்படாமல் இயற்கையாகவே எடுத்த திரைப்படம் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் ஹீரோ ஏமாந்தது போல ரசிகர்களும் ஏமாற்றத்துடன் கண்ணீருடன் வெளியேறினார்கள்.
அன்பே சிவம் இந்த திரைப்படம் ஆனது சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஆகும் இதில் கமலின் நடிப்பு மிக பிரம்மாண்டமாக அமைந்தது மட்டுமில்லாமல் படத்திற்கு காதல் ஆக்க்ஷன் போன்றவை தேவை கிடையாது நடிப்பு மட்டுமே போதும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த திரைப்படம் அமைந்தது என்றே சொல்லலாம்.
96 திரைப்படம் திரிஷா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பள்ளிப்பருவ காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது மட்டுமில்லாமல் கடைசியில் இருவரும் ஒன்று சேராமல் பிரிவது பலவையும் கண்ணீர் சிந்த வைத்தது.