தெரியாம வந்துட்டோம்.. ரசிகர்களை வச்சி செய்த 5 திரைப்படங்கள்.! லிஸ்ட்டில் மாட்டிய விஜய் படம்

actors
actors

சினிமா உலகில் பல்வேறு திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் அந்த அனைத்து படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா என்றால் கேள்விக் குறிதான்.. சில படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கின்றன. சரி இல்லாத படம் நெகட்டிவ் விமர்சனங்களும் வைத்து வருகின்றனர். அப்படி இந்த படத்தை ஏண்டா பார்க்க வந்தோம் என்று யோசிக்க வைத்த ஐந்து திரைப்படங்கள் பற்றி பார்ப்போம்..

தொடரி : பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஓடும் ரயிலில் படமாக்கப்பட்டது.. சுத்தி சுத்தி ஒரே இடத்தை காண்பித்தால் ரசிகர்கள் உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. இதற்கு முன் பிரபு சாலமனின் ஹிட் படங்களான கும்கி ,மைனா போன்ற படங்கள் இயற்கையை சார்ந்து எடுத்த படங்கள். பெரிய வெற்றி பெற்றது. ஆனால் தொடரி படம் அவருக்கு பெரிய ஹிட் கொடுக்கவில்லை..

கோப்ரா : அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகள் போட்டு நடித்து வெளிவந்த திரைப்படம் தான் கோப்ரா. இந்த படத்தின் கதை சுமாராக இருந்தாலும் இயக்குனர் படத்தை வலவலவென மூன்று மணி நேரத்துக்கு மேல் இழுத்ததால் ஏண்டா இந்த படத்தை பார்க்க வந்தோம் என்ற நிலைமைக்கு ரசிகர்கள் தள்ளிவிட்டுள்ளார்.

பிரின்ஸ் : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்தை அனுதீப் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் அந்த காலத்தில் நடந்த வெள்ளைகாரர்களின் கதையை குறிப்பிட்டதால் படம் ரசிகர்களுக்கு ரொம்ப போர் அடித்துள்ளது. அதனால் இந்த படமும் சுமாரான வரவேற்பை கண்டது.

சுறா : விஜய், தமன்னா, வடிவேலு போன்றோர் நடிப்பில் வெளிவந்த சுறா திரைப்படம் விஜய்க்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவரது ஐம்பதாவது படம் என்பது ஸ்பெஷலாக இருக்கும் ஆனால் விஜய்க்கு இந்த படம் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

10 எண்றதுக்குள்ள : விஜய் மில்டன் இயக்கிய இந்த திரைப்படத்தில் விக்ரம், சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே தெரியாத அளவிற்கு ரசிகர்களுக்கு இந்த படம் ரொம்ப போர் அடித்துள்ளது.