2023 ஆம் ஆண்டு இந்திய சினிமா உலவுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது பல படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்று இருக்கின்றன அதுவும் குறிப்பாக இந்தியாவையும் தாண்டி வெளிநாடுகளிலும் நல்ல வசூலை அள்ளி உள்ளது அப்படிப்பட்ட படங்கள் குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
பதான் : பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோன், சல்மான் கான், ஜான் ஆபிரகாம் உள்பட பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார் 225 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல கைதட்டல் வாங்கிய அதிக நாட்கள் ஓடியது வசூலில் 1000 கோடிக்கு மேல் அள்ளி சாதனை படைத்தது. இந்தியாவை தவிர்த்து பிற நாடுகளில் மட்டுமே 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது பதான்.
ஜவான் : அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அப்பா – மகன் பாசத்தை பற்றி சொல்லும் படம் அதேசமயம் ஆக்சன், காமெடி என அனைத்தும் இருந்ததால் மக்கள் மத்தியில் படம் சென்றடைந்தது இதுவரை மட்டுமே 1100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது வெளிநாடுகளில் மட்டும் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாம்.
ஜெயிலர் : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் வழக்கமான அப்பா – மகன் பாசத்தை எடுத்துரைக்கும் படமாக இருந்தாலும் படத்தில் ரஜினி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மோகன்லால், சிவராஜ் குமார், விநாயகன் போன்றவர்களின் கதாபாத்திரம் வித்தியாசமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்தது இந்தியாவை தவிர்த்து பிற நாடுகளில் மட்டுமே 196 கோடி வசூல் செய்தது.
ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி : கரன் ஜோஹர் இயக்கத்தில் ரன்வீர் சிங் மற்றும் ஆலய பட் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ரொமான்டிக் மற்றும் காதல் திரைப்படமாக இருந்ததால் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். அதனாலயே இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது இந்தியாவையும் தாண்டி பிற நாடுகளில் மட்டுமே சுமார் 164 கோடி வசூல் செய்தது.
பொன்னியின் செல்வன் 2 : மணிரத்தினம் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவானது படம் நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்தது அதன்படி பொன்னியின் செல்வன் பார்ட் 1 வெளியாகிறது வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது பார்ட் 2 திரைப்படமும் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது இந்தியாவையும் தவிர்த்து பிற நாடுகளில் மட்டுமே 130 கோடி வசூல் செய்தது.