தமிழ் சினிமாவில் ஒரு ஆண்டிற்கு பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகிறது அந்த வகையில் அந்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களுக்கு பிடித்த வண்ணம் இருக்கிறதா என்றால் கிடையாது அதில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே ரசிகர்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திஉள்ளது அவ்வாறு இடம் பெற்ற ஐந்து திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
மறுபடியும் என்ற திரைப்படமானது பாலு மகேந்திரா இயக்கத்தில் உருவான திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் ரேவதி நிழல்கள் ரவி அரவிந்த்சாமி போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து அதுமட்டுமில்லாமல் கணவனை இழந்த பெண்கள் எவ்வாறு தன்னம்பிக்கையுடன் போராடுகிறார்கள் என்பது இந்த திரைப்படத்தின் கதையாகும்.
வீடு என்ற திரைப்படமும் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் நடிகை அர்ச்சனா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் சொந்த வீடு கட்டுவதற்கு எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறார் என்பது இந்த திரைப்படத்தின் கதையாகும்.
உதிரிப்பூக்கள் இந்த திரைப்படமானது மகேந்திரன் இயக்கத்தில் சரத்பாபு மற்றும் அஸ்வின் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படமாகும் இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்துவிட்டது. மேலும் இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் மோசமான ஆண்களால் பெண்களின் வாழ்க்கை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
விதி என்ற திரைப்படத்தில் பூர்ணிமா பாக்யராஜ் சுஜாதா ஜெய்சங்கர் மனோரமா மோகன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டது.
முதல் மரியாதை பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தது மட்டுமில்லாமல் ராதா மற்றும் வடிவுகரசி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டது.