2023 முதல் வாரத்தில் வசூலில் ருத்ர தாண்டவம் ஆடிய 5 திரைப்படங்கள்.! லிஸ்ட்டில் உங்க ஃபேவரைட் ஹீரோ இருக்காரா.?

Jailer
Jailer

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகரின் படங்கள் வெளிய வந்து மிகப்பெரிய வசூலை பதிவு செய்கிறது  அந்த வகையில் 2023 ல் முதல் வாரத்தில் அதிகம் வசூல் செய்த 5 படங்கள் குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

1. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம்.. ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி வெற்றிநடை கண்டு வருகிறது படத்தில் தன் மகனை ரவுடிகள் கொன்றுவிட்டதாக நினைத்து ரஜினியை அவர்களை கொல்லப் போவார் கடைசி நேரத்தில் தன் மகன் உயிரோடு இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு அவரை மீட்பது தான் கதை..

படத்தில் ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் அற்புதமாக இருந்ததால் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது முதல் வாரத்தில் மட்டுமே சுமார் 425.40 கோடி அள்ளி சாதனை படைத்துள்ளது.

2. மணிரத்தினம் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவான பொன்னியின் செல்வன் பார்ட் 1 திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக 500 கோடிக்கு மேல அள்ளியது முதல் வாரத்தில் மட்டுமே சுமார் 261. 60 கோடி வசூல் செய்து அசத்தியது.

3. பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் வாரிசு படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி  பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது முதல் வாரத்தில் மட்டும் 210.40 கோடி வசூல் செய்தது.

4.  வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் உருவான திரைப்படம் துணிவு. பேங்கில் நடக்கும் குளறுபடிகளை அப்பட்டமாக எடுத்துக்காட்டியது படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து அசத்தியுள்ளனர். படம் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 146.85 கோடி வசூல் செய்து அசத்தியது.

5. தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் தனுஷ். இவர் நடித்த வாத்தி திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது படம் கல்வி சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் கைத்தட்டல் வாங்கியது படம் முதல் வாரத்தில் மட்டும் 70.20 கோடி வசூல் செய்து அசத்தியது.