தமிழ் சினிமா உலகில் வருடத்திற்கு குறைந்தது 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வருகின்றன அதன்படி 2023 ஆண்டு நடிகர், நடிகர்களுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது ஏனென்றால் இந்த ஆண்டு வெளிவந்த பெரும்பாலான படங்கள் வெளிவந்து விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று இருக்கின்றன அதன்படி 2023 ல் முதல் நாளே அதிக வசூலை அள்ளிய ஐந்து திரைப்படங்கள் குறித்து தான் பார்க்க இருக்கிறோம்..
1. துணிவு : எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க பேங்க்கில் நடக்கும் குளறுபடியை அப்பட்டமாக காண்பித்தது இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று முதல் நாளே சுமார் 19 கோடி தமிழ்நாட்டில் மட்டும் வசூல் செய்தது.
2. வாரிசு : வம்சி இயக்கத்தில் தில்ராஜு தயாரிப்பில் விஜய் நடிப்பில் வெளிவந்து வெற்றியை பெற்ற திரைப்படம் வாரிசு இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக இருந்தது படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாளே சுமார் 17 கோடி கலெக்ஷன் செய்தது.
3. வாத்தி :வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வாத்தி இந்த படம் முழுக்க முழுக்க கல்வி சம்பந்தப்பட்ட படமாக இருந்ததால் ரசிகர்கள் மற்றும் குடும்ப அடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது முதல் நாளில் மட்டும் சுமார் 10 கோடி வசூல் செய்தது.
4. பத்து தல : தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருவர் சிம்பு. மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு நடித்த இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது முதல் நாளே 6 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
5. அகிலன் : பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த திரைப்படம் அகிலன் இந்த படம் முழுக்க முழுக்க ஹார்பர் சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருந்தது படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது முதல் நாளில் மட்டுமே இந்த திரைப்படம் சுமார் 3 கோடி வசூல் செய்தது.