டாப் ஹீரோக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர் அதனால் அவருடைய படங்கள் சுமாராக இருந்தாலே 200 கோடி எல்லாம் வசூல் அள்ளிவிடும் படம் சூப்பராக இருந்து விட்டால் 400, 500 கோடி கன்ஃபார்ம் அப்படி உலக அளவில் 400 கோடி வசூல் செய்த 5 தமிழ் திரைப்படம் குறித்து தான் இன்று பார்க்க இருக்கிறோம்..
1. தமிழ் சினிமாவில் ரெக்கார்ட் மேக்கராக வலம் வருவர் ரஜினி.. இவர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான 2.0 திரைப்படம் படம் முழுக்க முழுக்க நெட்வொர்க் சிக்னல் மூலம் பறவைகள் பாதிக்கப்படுகிறது இதனால் மனித இனம் அழிவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி இந்த படத்தை சூப்பராக காண்பித்தனர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதிக நாட்கள் ஓடியதோடு400 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது படத்தில் ரஜினியுடன் இணைந்து அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.
2. பொன்னியின் செல்வன் கதையை புத்தகத்தில் படித்து வந்தவர்களுக்கு அதை திரையில் காண்பித்து விருந்து கொடுத்தவர் மணிரத்தினம். இரண்டு பாகங்களாக வெளியானது முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடியது விடும் மட்டுமல்லாமல் 500 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
3. பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்து திரைப்படம் கபாலி முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இது இருந்ததால் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்து போய் இருந்தது படத்தில் ரஜினியுடன் இணைந்து தன்ஷிகா, கிஷோர், ராதிகா ஆப்தே, கலையரசன் என பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர் படம் அதிக நாட்கள் ஓடிய 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது.
4. விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு கமல் நடிப்பில் உருவான திரைப்படம் விக்ரம் . தனது மகனை போதை பொருள் கும்பல் கொன்று விடும் அவர்களை சாகடிக்க ஒரு குரூப்புடன் கமல் இறங்குவார் படத்தில் ஒவ்வொரு சீனும் ஆக்ஷன்க்கு பஞ்சம் இல்லாமல் இருந்ததால் அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் 420 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது.
5. கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர். படம் ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் கைத்தட்டல் வாங்கியது தற்போதும் படம் ஹவுஸ் ஃபுல் ஆக ஓடி கொண்டு இருப்பதால் மிகப்பெரிய ஒரு வசூலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது இதுவரை மட்டுமே 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது.