நட்பை அடிப்படையாக வைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 5 திரைப்படங்கள்..! சும்மா சொல்லக்கூடாது ஒவ்வொன்னும் தரமான படம்தான்..!

rajini-2

பொதுவாக ஒருவருக்கு எந்த ஒரு உறவும் இல்லாமல் கூட இருந்திருக்கும் அந்த வகையில் எந்த ஒரு மனிதனுக்கும் நட்பு என்ற உறவு இல்லாமல் இருந்ததே கிடையாது அந்த வகையில் நட்பை ஊக்குவிக்கும் வகையிலும் அதனை பெருமை படுத்தும் வகையிலும் பல்வேறு திரைப்படங்கள் சினிமாவில் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நட்பை அடிப்படையாக வைத்து நடித்த திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம்.

தளபதி என்ற திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருப்பார் மேலும் இந்த திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக மம்முட்டியும் நடித்திருப்பார். இவ்வாறு 1993ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது என்றும் ரசிகர்களுக்கு மிகப்பிடித்த திரைப்படமாக அமைந்து வருகின்றது.

சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் அண்ணாமலை. இத்திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஜனகராஜ் ஆகிய இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள் இத்திரைப்படத்தில் இவர்களுடைய நட்பு பெரிதும் ரசிகர்களால் பேசப்பட்டது.

annamalai-1
annamalai-1

பாட்ஷா திரைப்படமானது தமிழ் சினிமாவில் ஒரு மறக்கமுடியாத திரைப்படமாக அமைந்தது இத்திரைப்படத்தையும் சுரேஷ்கிருஷ்ணா அவர்கள்தான் இயக்கியிருந்தார்.  அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் ரஜினி நடித்த மிகப்பெரிய கேங்ஸ்டர் திரைப்படத்தில் இதுவும் ஒன்று.  இதில் ரஜினியின் நெருங்கிய நண்பர் மறைந்த பிறகு ரஜினி ஒரு கேங்க்ஸ்டராக மாறி விடுவார்.

குரு சிஷ்யன் இத்திரைப்படத்தில் ரஜினி மற்றும் பிரபு ஆகிய இருவரும் நடித்திருப்பார்கள்.  இவர்களுக்கு ஜோடியாக கௌதமி மற்றும் சீதா நடித்த இத் திரைப்படமானது முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

குசேலன் இத்திரைப்படத்தில் ரஜினி தன்னுடைய சொந்த கதாபாத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகவே நடித்திருப்பார்.  அந்த வகையில் இவர் புகழின் உச்சத்தில் இருந்தும் தன்னுடைய ஆரம்ப கால நண்பன் பசுபதிக்கு விசுவாசமாக இருப்பது இத்திரைப்படத்தின் கதை ஆகும்.