ஜூலை 28 – ல் வெளியாகும் 5 திரைப்படங்கள்.! கடும் போட்டியில் DD ரிட்டன்ஸ் மற்றும் LGM

santhanam
santhanam

2023 ஆம் ஆண்டு திரை உலகிற்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது ஏனென்றால் பெரும்பாலான படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன அந்த வகையில் அஜித்தின் துணிவு , விஜயின் வாரிசு, தனுஷின் வாத்தி, சிவகார்த்திகேயனின் மாவீரன் என சொல்லிக் கொண்டே போகலாம் பெரிய படங்கள் தொடங்கி சின்ன பட்ஜெட் படங்கள் வரை வெற்றி பெற்றுள்ளன அந்த வகையில் ஜூலை 28ஆம் தேதி 5 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இந்த படங்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

1. டி டி ரிட்டன்ஸ்  : காமெடி நடிகராக இருந்து ஹீரோ அவதாரம் எடுத்தவர் சந்தானம் ஆரம்பத்தில் காமெடி கலந்த படங்களில் நடித்து வந்த இவர் திடீரென டிடி ரிட்டன்ஸ் என்னும் பேய் படத்தில் நடித்தார் படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து பார்ட் 2  சக்க போடு போட்டதை தொடர்ந்து தற்பொழுது டி டி ரிட்டன்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது.  டைலர் வெளிவந்து எதிர்பார்ப்பை தூண்டி விட்ட நிலையில் நாளை படம் வெளியாகிறது படம் முழுக்க முழுக்க திரில்லர் மற்றும் காமெடி கலந்த படமாக உருவாகி உள்ளது.

2. பிட்சா 3 : பார்ட் 1 விஜய் சேதுபதி நடித்து படம் பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் உருவாகி வந்தன அதன்படி பார்ட் 3 நாளை வெளியாகியுள்ளது படத்தில் அஸ்வின், காளி வெங்கட், ரவீனா தாஹா, குரேஷி மற்றும் பலர் நடித்துள்ளனர் பிட்சா 3 திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

3. லவ் : பரத்தின் 50 வது திரைப்படமான இது முழுக்க முழுக்க கணவன் மனைவிக்குள் ஏற்படும் சின்ன பிரச்சனையை பற்றி பெரிதாக சொல்ல வருகிறது படத்தில் பரத்துடன் இணைந்து வாணி போஜன்  மற்றும் பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

4.  LGM :  தோனி மனைவி தயாரித்துள்ள இந்த திரைப்படம் முழுக்க முழுக்க மருமகள் மற்றும் மாமியார் இடையே நடக்கும் பிரச்சனையை காமெடி கலந்த ஒரு படமாக எடுத்துள்ளது படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு, நதியா மற்றும் பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

5. டைனோசர்ஸ் :  உதய் கார்த்திக், சாய் ப்ரியா தேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் படத்தை எம் ஆர் மாதவன் எடுத்துள்ளார் படம் அருமையாக வந்துள்ளதாக படத்தை பார்த்த ராதிகா கூறியுள்ள நிலையில் நாளை இந்த படம் திரைக்கு வர இருக்கிறது இந்த படம் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.