தியேட்டரில் மண்ணைக் கவ்விய ஆண்டவரின் 5 திரைப்படங்கள்..! தடம் தெரியாமல் போன மும்பை எக்ஸ்பிரஸ்..!

நடிகர் கமலஹாசன் அவர்கள் தற்போது வரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் அந்த வகையில் தற்பொழுது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல் நடித்த வருவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்காக தன்னுடைய உடலை தானே வருத்திக் கொண்டு வருகிறாராம்.

என்னதான் கமலஹாசன் பல்வேறு மெகா ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்திருந்தாலும் அவருடைய வாழ்வில் மறக்க முடியாத அளவிற்கு மாபெரும் தோல்வி பெற்ற ஐந்து திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

ராஜ பார்வை இந்த திரைப்படம் சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆகும் இந்த திரைப்படத்தில் கமலஹாசன் கதாநாயகனாக நடித்தது மட்டுமில்லாமல் இவை கமலஹாசனின் நூறாவது திரைப்படம் ஆகும் மேலும் இந்த திரைப்படத்தின் கதையை தானே எழுதி சொந்த தயாரிப்பில் தயாரித்த நடிகர் கமலஹாசன் மிகப்பெரிய தோல்வியை இந்த திரைப்படத்தின் மூலம் சந்தித்தார். மேலும் இதனை தொடர்ந்து தன்னுடைய தயாரிப்பை நிறுவனத்தை 5 வருடமாக இறுக்கமாக பூட்டி வைத்து விட்டார்.

குருதிப்புனல் இந்த திரைப்படம் ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆகும் இதில் கமலஹாசன் உடன் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களும் இணைந்து நடித்திருப்பார் மேலும் கௌதமி நாசர் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்த இந்த திரைப்படத்தில் போலீஸ் மற்றும் நக்சலைட்டுகளுக்குள் இடையே உள்ள கதையை வைத்து எடுக்கப்பட்ட நிலையில் இவை இந்தியில் வெளியான துரோக்கள் என்ற திரைப்படத்தின் ரீமிக்ஸ் திரைப்படமாகும். ஆனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

ஹே ராம் 2000 ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் தயாரித்து இயக்கி கதை வசனம் எனத்தானே நடித்த இந்த திரைப்படத்தில் ஷாருக்கான் ராணி முகர்ஜி போன்ற பாலிவுட் பிரபலங்களும் நடித்திருந்தார்கள் மேலும் இந்த திரைப்படம் இந்து மற்றும் முஸ்லிம் மதங்களுக்குள் ஏற்பட்ட கலவரத்தை உண்மை கதையாக எடுத்த இந்த திரைப்படம் மாபெரும்தோல்வியை சந்தித்தது.

மும்பை எக்ஸ்பிரஸ் இந்த திரைப்படம் தமிழ் மட்டும் ஹிந்தி என இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்ட நிலையில் இதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா என்பவர் நடித்திருந்தார் மேலும் இந்த திரைப்படம் வெளிவந்த அதே நேரத்தில் சச்சின் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சந்திரமுகி திரைப்படம் வெளிவந்த காரணத்தினால் இந்த திரைப்படம் தடம் தெரியாமல் போய்விட்டது.

உத்தம வில்லன் இந்த திரைப்படம் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா பூஜா குமார் பாலச்சந்தர் உள்ளிட்டோர் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் மாபெரும் தோல்வியை சந்தித்தது மேலும் இந்த திரைப்படத்தில்  கமலஹாசனின் நடிப்பு மட்டும் பேசப்பட்டாலும் படத்தை பார்ப்பதற்கு அந்த அளவிற்கு திருப்தி இல்லை என்பதை ரசிகர்களின் விமர்சனம் ஆகும்.

Leave a Comment

Exit mobile version