தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தாலும் அவர்களுடைய ரசிகர்கள் இன்று வரையிலும் எலியும் பூனையாக சண்டை போட்டுக் கொண்டே வருகின்றனர். அதிலும் குறிப்பாக சமூக வலைதளங்களை தல தளபதி ரசிகர்கள் அடித்துக்கொள்ளாத ஒருவரை தான்.
இதற்கு அஜித் மற்றும் விஜய் தான் காரணம் என்று கூறி வருகின்றனர் ஏனென்றால் காலங்காலமாக இவர்களது படங்களில் ஒருவர் மற்றவரை தாக்கும் அளவுக்கு பஞ்ச் டயலாக்கை பேசிய ரசிகர்களை வெரியேற்றுவார்கள் அப்படி தான் நடிகர் விஜய் அவர்கள் புதிய கீதை படத்தில் உன்னோட தலைவன் எல்லாத்தையும் வர சொல்லு நான் இங்கதான் இருப்பேன் என்று மறைமுகமாக அஜித்தை தாக்கி பேசியிருப்பார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் அஜித் அவர்கள் ஏகப்பட்ட பஞ்ச் டயலாக்கை பேசியிருப்பார். அதிலும் குறிப்பாக நடிகர் விஜய்யை அதிகம் தாக்கி பேசி இருப்பார். அட்டகாசம் படத்தில் உனக்கென்ன உனக்கு என்ன என்ற பாடலில் நான் ஹிட்லரா இருந்தா உனக்கு என்ன புத்தனா இருந்தால் உனக்கு என்ன என்று பாடலிலேயே டயலாக்கை வைத்து விஜயை தாக்கியிருப்பார்.
இதற்கு பதிலடி கொடுத்த விஜய் அவர்கள் சச்சின் படத்தில் நான் ஹிட்லர் ஆகவும் இருக்கத் தேவையில்லை புத்தராகவும் இருக்கத் தேவையில்லை என்று ஒரு டயலாக்கை பேசி இருப்பார். மேலும் திருமலை படத்தில் வாழ்க்கை ஒரு வட்டம் அதில் கீழ இறப்பவன் மேலே போவான் மேலே இருப்பவன் கீழே வருவான் என அஜித்தை தாக்கியிருப்பார்.
உடனே அஜித்தும் ஜனா படத்தில் வாழ்க்கை ஒரு வட்டமோ சதுரமோ இல்ல. அது அங்கே தான் இருக்கும் என்று விஜயை தாக்கியிருப்பார். இப்படி தங்களுடைய படத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொண்டு ரசிகர்களையும் வெளியேற்றி விட்டார்கள் அதுமட்டுமல்லாமல் நடிகர் அஜித் அவர்கள் சிறிது காலம் படத்தில் நடிக்காமல் இருந்தபோது அவருடைய கேரியரே முடிந்துவிட்டது என்று எண்ணியிருந்தபோது வெளியான படம் பில்லா இந்த படம் அஜித்திற்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் ஐ அம் கம் பேக் என்று குறிப்பிட்டு தெறிக்க விட்டிருப்பார்.
உடனே இதற்கு பதில் அளிக்கும் விதமாக நடிகர் விஜய் அவர்கள் துப்பாக்கி படத்தில் ஐ அம் வெயிட்டிங் என்று பதில் கொடுத்தார். தற்போது எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் தல தளபதியின் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருகிறது இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க ஒரு சில ரசிகர்கள் இருவரும் மற்றவரை தாக்கி என்னென்ன பஞ்ச் டயலாக் பேசி சமூக வலைதளங்களில் ரசிகர்களை மோதவிட போகிறார்களோ என்ற அதிர்ச்சியில் உள்ளனர்.