2022 ல் youtube இல் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற 5 திரைப்பட ட்ரெய்லர்.!

movies
movies

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்களின் ட்ரெய்லர் youtube இல் அதிக பார்வையாளர்களை பெற்ற 5 திரைப்படங்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

பீஸ்ட்:- நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் 29.6m+ பார்வையாளர்களை கொண்டுள்ளது.

பிகில் :- இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் பிகில். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா அவர்கள் நடித்துள்ளனர் மேலும் இந்த திரைப்படத்தில் கதிர், யோகி பாபு, என பல திரைப்பட பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி 18.3 m+ பார்வையாளர்களை கொண்டுள்ளது.

விக்ரம்:- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ஆக்சன் திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் youtubeல் 12.81m+ பார்வையாளர்களை கடந்துள்ளது.

விசுவாசம் :- சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருக்கும் திரைப்படம் விசுவாசம் இந்த திரைப்படத்தில் அஜித் அவர்களுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளனர். இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி 12.72m+ பார்வையாளர்களை கொண்டுள்ளது.

கே ஜி எஃப் 2 :- பிரசாந்த் நில் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி செட்டி, பிரகாஷ் ராஜ்  உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் அதிரடி திருடன் திரைப்படம் கே ஜி எஃப் சாப்டர் 2. இந்தத் திரைப்படம் 11.88m+ பார்வையாளர்களை கடந்துள்ளது.