5 mega hit movies that melted the stone mind: தமிழ் சினிமாவை பொருத்தவரை பலவகையான கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது அதில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணமே அந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் நடிப்பு தான். அந்த வகையில் அவர்களுடைய நடிப்பும் கதாபாத்திரமும் சிறந்தவையாக இருப்பின் அந்த திரைப்படம் மெகா ஹிட் அடித்து விடும்.
அந்தவகையில் திரையரங்கில் ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு வெளிவந்த தமிழ் திரைப்படங்களை பற்றி பார்க்கலாம்.
பாசமலர்- இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், சாவித்ரி ஆகியோர்களின் நடிப்பில் வெளிவந்த மெகா ஹிட் அடித்த திரைப்படம் தான் பாசமலர் திரைப்படம் 1960ஆம் ஆண்டு வெளிவந்தது. மேலும் இந்த திரைப்படத்தில் அண்ணன் தங்கை பாசத்திற்கு அளவே இல்லாமல் ரசிகர்களை படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அழ வைத்திருப்பார்கள்.
மகாநதி- தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை திரட்டியவர்தான் நடிகர் கமலஹாசன் இவர் நடிப்பில் வெளிவந்த மகாநதி என்ற திரைப்படத்தை எந்த ஒரு ரசிகர்களாலும் இன்றும் மறக்க முடியாது ஏனெனில் ஒரு மனிதன் தன்னுடைய குடும்பத்தில் ஏற்படும் பல்வேறு கஷ்டங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படமானது ரசிகர்களை அழ வைத்தது மட்டுமல்லாமல் மாபெரும் ஹிட்டுக் கொடுத்து விட்டது.
அஞ்சலி- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது மணி ரத்தினத்தின் வாழ்வில் ஒரு மறக்க முடியாத திரைப்படமாக அமைந்துவிட்டது இந்த திரைப்படத்தில் குழந்தை வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ஆனது ரசிகர்களின் கண்களை கலங்க வைத்துவிட்டது.
அன்பே சிவம் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவான இந்த திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை தந்தது மட்டுமல்லாமல் சக மனிதர்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை மக்களுக்கு எடுத்துரைத்திருப்பார். இந்த திரைப்படத்தில் நடிகர் மாதவனும் இணைந்து நடித்திருப்பார்.
7ஜி ரெயின்போ காலனி- நடிகர் ரவி கிருஷணன் நடிப்பில் உருவான இந்த திரைப்படமானது தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் அப்பாவுக்கும் மகனுக்கும் நடக்கும் சண்டைகளை மிக சிறப்பாக காட்டியிருப்பார்கள். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது ரசிகர் மனதில் நீங்காத இடம்பிடித்து விட்டது.