ஆரம்பத்தில் பொழுதுபோக்கிற்காக நாடகத்தில் நடித்த ரஜினிகாந்த் அவர்கள் அவருடைய ஸ்டைல் மற்றும் சுறுசுறுப்பு பலருக்கும் பிடித்ததன் காரணமாக இயக்குநர் கே பாலச்சந்தர் அவர்கள் ரஜினிகாந்தை திரைப்படத்தில் நடிக்க வைத்தார் அந்தவகையில் இவர் நடித்த முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள் திரைப்படம் ஆகும். இவ்வாறு இவர் இந்த திரைப்படத்தில் ஸ்ரீவித்யாவின் கணவனாக நடித்திருப்பார். என்ன தான் இந்த திரைப்படத்தில் அறிமுகமானாலும் தொடர்ந்து இவருக்கு கிடைத்தது எனவும் வில்லன் கதாபாத்திரம் தான். அந்த வகையில் ரஜினி வில்லனாக நடித்து மிரட்டிய திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
16 வயதினிலே இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை இயக்குனர் பாரதிராஜா அவர்கள் தான் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் கமலஹாசன் ஸ்ரீதேவி போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்த இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் பரட்டை என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். இதில் கமல் சப்பானி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இந்த திரைபடம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.
நெற்றிக்கண் திரைப்படம் ஆனது எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த், சரிதா, லட்சுமி போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்த இந்த திரைப்படத்தில் சந்தோஷ் இரட்டை வேடத்தில் தந்தை-மகன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ரஜினிகாந்த் சக்கரவர்த்தி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் சரியான பொம்பள பொறுக்கியாக காட்டியிருப்பார்.
அவர்கள் என்ற திரைப்படமானது கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும் இந்த திரைப்படத்தில் கமலஹாசன் சுஜாதா போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்த இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் வில்லனாக நடித்து இருப்பார் இதில் சுஜாதாவை அவர் காதல் செய்கிறார் என்பது தெரிந்தும் ரஜினிகாந்த் அவரை திருமணம் செய்து கொண்டு கொடுமைப்படுத்துவது என்பதை இந்த திரைப்படத்தின் கதையாகும்.
ஆடு புலி ஆட்டம் இந்த திரைப்படத்தை இயக்குனர் எஸ்பி முத்துராமன் அவர்கள் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்திலும் கமலஹாசன் கதாநாயகனாக நடித்தது மட்டுமில்லாமல் ஸ்ரீபிரியா கதாநாயகியாக நடித்து இருப்பார் மேலும் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் தன்னுடைய சொந்த பெயரான ரஜினி என்ற கதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்து இருப்பார்.
காயத்ரி இந்த திரைப்படம் இயக்குனர் பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும் இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர் ஸ்ரீதேவி போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து அதுமட்டுமில்லாமல் ரஜினிகாந்த் ஸ்ரீதேவி மீது ஆசைப்படும் வில்லனாக நடித்திருப்பார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.