பொதுவாக தமிழ் இயக்குனர்கள் தமிழ் நடிகர்களை இயக்கி மாபெரும் வெற்றியை ருசித்துள்ளார்கள் ஆனால் வேறு மொழி நடிகர்களை இயக்கி ஹிட் கொடுப்பது கொஞ்சம் கஷ்டம்தான் ஆனால் வேற்று மொழியாக இருந்தாலும் சாதிக்க முடியும் என பாலிவுட்டை ஒரு கலக்கு கலக்கிய ஐந்து தமிழ் இயக்குனர்களை பற்றி காணலாம்.
இயக்குனர் அட்லி : தமிழில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் அவர்களை வைத்து தெறி, மெர்சல், பிகில் என பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார் ஆனால் இவருக்கு பெரிதாக ஹிந்தி தெரியாது ஆனால் இன்றைய காலகட்டத்தில் பல ஹிந்தி ஹீரோக்கள் அட்லி கால் சீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு காரணம் ஷாருக்கான் அவர்களை வைத்து இயக்கிய ஜவான் திரைப்படம் தான்.
தேவதாசன் கதைய போல என் கதையாச்சு.. நித்தம் நித்தம் குடியால் நடுத்தெருவுக்கு வந்த 5 தமிழ் நடிகைகள்..
ஏ ஆர் முருகதாஸ்: ஹிந்தி கத்துக்க விரும்பாத ஒரு இயக்குனர்களில் ஒருவர் ஏ ஆர் முருகதாஸ் இவர் தமிழில் அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வெற்றி பெற்றுள்ளார் இவர் ஹிந்தியில் கஜினி திரைப்படத்தை இயக்கி வெற்றி பெற்றவர் அதேபோல் ஹிந்தி கத்துக்க விரும்பாத இயக்குனர்களில் இவரும் ஒருவர்.
சங்கர்: இயக்குனர் சங்கர் பாலிவுட்டில் நாயகன் திரைப்படத்தை இயக்கும்போது ஹிந்தி தெரியாதாம் ஆனால் அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
மணிரத்தினம்: பாலிவுட்டில் பல திரைப்படங்களை இயக்கியுள்ள இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம் அதுமட்டுமில்லாமல் இயக்குனர் மணிரத்தினம் பாம்பேவில் தான் படித்துள்ளார் ஆனால் ஹிந்தி தெரியாது எனவும் ஹிந்தி கத்துக்க விரும்பவில்லை எனவும் மணிரத்தினம் கூறியுள்ளார்.
நயன்தாரா போல் விக்னேஷ் சிவனுக்கு இருந்த காதல் கதை.! பல வருட காதல் முறிவுக்கு காரணம் இதுதானா..
பாரதிராஜா: இயக்குனர் பாரதிராஜா பாலிவுட்டில் 80’s காலகட்டத்திலேயே ஒரு சில திரைப்படங்களை இயக்கியுள்ளார் ஹிந்தி கத்துக்க விரும்பாத இயக்குனர்களில் இவரும் ஒருவர் இருந்தாலும் பாலிவுட் திரைப்படத்தை இயக்கும் போது இங்கிலீஷ்ல பேசி படத்தை இயக்கியுள்ளார் இப்படி தமிழ் இயக்குனர் பாலிவுட்டிலும் கொடி கட்டி பறந்துள்ளார்கள்.