பட வாய்ப்பு இல்லாமல் அடிமட்ட லெவலுக்கு இறங்கிய 5 முன்னணி நடிகைகள்.. அட சமந்தாவை தொடர்ந்து இந்த நடிகையுமா

samantha
samantha

திரை உலகில் இருக்கும் நடிகைகள் குணச்சித்திரம் ஹீரோயின் என்ற அந்தஸ்தையும் தாண்டி மற்றவற்றிலும் கவனம் செலுத்தி தன்னை பிரபலப்படுத்திக் கொள்கின்றனர் அந்த வகையில் டாப் நடிகைகள் பலரும் ஐட்டம் டான்ஸ் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மார்க்கெட்டை பெரிய அளவில் பிரபலப்படுத்துகின்றனர். அப்படிப்பட்ட 5  நடிகைகளை பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்..

1. ஆண்ட்ரியா  : பின்னணி பாடகியான இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அதனை தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து பேரையும், புகழையும் சம்பாதிக்கிறார் இவர் ஜீவா, சந்தானம் நடிப்பில் உருவான “என்றென்றும் புன்னகை” திரைப்படத்தில் ரொமான்டிக் பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

2. ஸ்ரேயா சரண்  : தென்னிந்திய சினிமா உலகில் தவர்க்க முடியாத நடிகையான இவர் ரஜினியின் சிவாஜி படத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். அதை தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் ஒரு இடத்தில் பட வாய்ப்பு கிடைக்காமல் வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி அசத்தினார்.

3. சமந்தா : தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை சமந்தா இவர் கடந்த சில வருடங்களாக படங்களில் கிளாமர் காட்டுவது மற்றும் சோலோ படங்களில் நடித்த அசத்தி வருகிறார் இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஊ சொல்றியா மாமா பாடலுக்கு செம்ம கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

4. நயன்தாரா : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக ஓடிக் கொண்டிருக்கும் இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான எதிர்நீச்சல் திரை படத்தில் ஒரு ஐட்டம் டான்ஸ் ஆடி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் நயன்தாரா.

5. அஞ்சலி : ஜீவா நடிப்பில் உருவான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்து பெயரையும், புகழையும் சம்பாதித்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பு கிடைக்காததால் 2013 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 2 திரைப்படத்தில்  பாடல்கள் செம குத்தாட்டம் போட்டார்.