தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார் இவர் தனது 61வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்த வருகிறார் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு கோலாகலமாக வெளியாக இருக்கிறது மக்கள் மற்றும் ரசிகர்கள் இந்த படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்த பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது அதாவது நடிகர் அஜித்குமார் சினிமா உலகில் இருந்தாலும் தனக்கு நெருக்கமானவர்களுடன் தான் அதிகம் தன்னைப் பற்றி பகிர்ந்து கொள்வார் மற்றவர்களிடம் அதிகமாக பேசினாலும் தன்னுடைய விஷயங்களை பெரிதும் சொல்ல மாட்டார் இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்திற்கு நெருக்கமான ஐந்து பேர் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.
1. வெங்கட் பிரபு நடிகர் அஜித்குமாரின் 50 வது திரைப்படத்தை இயக்கி இருவரும் நல்ல நண்பர்களாக மாறினார் அதன் பிறகு இவர்கள் இருவரும் தொடர்ந்து நல்ல நட்புடன் இருக்கின்றனர் வெகு விரைவிலேயே இவர்கள் இருவரும் படம் பண்ணவும் இருக்கின்றனர்.
2. சிறுத்தை சிவாவுடன் முதன் முதலில் 2014 ஆம் ஆண்டு வீரம் படத்தின் மூலம் அஜித் இணைந்தார். அதன் பிறகு இருவரும் நல்ல புரிதல் இருந்ததால் தொடர்ந்து விவேகம், வேதாளம், விசுவாசம் என அடுத்தடுத்து படங்கள் பண்ணினர்.
3. நடிகர் பிரகாஷ் ராஜ் உடன் அஜித்தின் பழக்கம் படங்களில் நடிக்கும் போது ஏற்பட்டது இவர்கள் இருவரும் இணைந்து ஆசை, ராசி, பரமசிவன், ஆகிய மூன்று படங்களிலும் நடித்திருந்தனர் அஜித்திற்கும் இவருக்கும் உள்ள பழக்கம் ஆரம்ப காலத்தில் இருந்து இருக்கிறது சினிமா பற்றி பல விஷயங்களை அஜித் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டார்.
4. தமிழ் சினிமா உலகில் இயக்குனராகவும், ஹீரோவாகவும் ஓடுவர் ரமேஷ் கண்ணா இவரும், அஜித்தும் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளனர் குறிப்பாக வீரம், அமர்களம், வரலாறு, காதல் மன்னன், நீ வருவாய் என, அட்டகாசம், வில்லன் என பத்து படங்களில் இருவரும் சேர்ந்து நடித்திருக்கின்றனர் அஜித்திற்கும் இவருக்கும் நீண்ட காலமாக நட்புடன் இருக்கின்றனர்.
5. ஸ்ரீதேவியின் மூலம் போனி கபூரின் நட்பு ஏற்பட்டது அப்போதிலிருந்து அஜித்திற்கும் இவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது இவர்கள் இருவரும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் பணி வருகின்றனர் இப்பொழுது அஜித்தின் அடித்து வரும் துணிவு படத்தை கூட போனி கபூர் தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.