அணு அணுவாக டார்ச்சர் கொடுத்த இயக்குனர்கள்.. கோபத்தில் அஜித் தூக்கி எறிந்த 5 ஹிட் படங்கள்.! பயன்படுத்திக் கொண்ட வாரிசு நடிகர்

ajith
ajith

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித். சமிப காலமாக வெற்றி படங்களை கொடுத்தாலும் ஆரம்பத்தில் பல சூப்பர் ஹிட் படங்களை நழுவ விட்டுள்ளார்.  குறிப்பாக இயக்குனர்கள் கொடுத்த டார்ச்சலால் 5 ஹிட் படத்தை அஜித் வேண்டாம் என உதவி தள்ளி உள்ளார் அது குறித்து தான் பார்க்க இருக்கிறோம்.

1. நியூ : எஸ் ஜே சூர்யா, சிம்ரன் நடிப்பில் 2004 -ல் வெளியான திரைப்படம் நியூ. இந்த படம் வெளிவந்து ஏகப்பட்ட சர்ச்சையை கிளப்பியது ஆனால் முதலில் இந்த திரைப்படத்தில் அஜித் தான் நடிக்க இருந்தார் 2000 ஆண்டு அஜித், ஜோதிகா நடிக்க எஸ் ஏ சூர்யா இந்த படத்தை இயக்குவதாக அறிவிப்புகள் வெளியானது இந்த படத்தின் வித்தியாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியானது ஆனால் ஷூட்டிங் நடைபெறும் பொழுது எஸ் ஜே சூர்யா அஜித்தின் நடிப்பை குறை சொல்லி இருக்கிறார் ஒரு கட்டத்தில் நீங்களே நன்றாக நடிக்கிறீர்கள் இந்த படத்தில் நீங்களே நடித்துக் கொள்ளுங்கள் என கூறி அஜித் விலகி விட்டாராம்.

2. ஏறுமுகம் : அஜித்தின் ஃபேவரைட் இயக்குனரான சரண். காதல் மன்னன், அமர்க்களம் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்த நிலையில் மூன்றாவதாக ஏறுமுகம் என்னும் படத்தில் இணைந்தனர் இந்த படத்தின் படப்பிடிப்பு 40% முடிவடைந்த நிலையில் அஜித்துக்கு இந்த கதை பிடிக்கவில்லை எனவே இதிலிருந்து விலகி விட்டாராம் பிறகு விக்ரமை வைத்து ஜெமினி என்ற பெயரில் படத்தை எடுத்தார் படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

3. காங்கேயன்  : கே.ஏஸ். ரவிகுமார் அஜித்தை வைத்து வரலாறு என்னும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்ததை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க இருவரும் இணைந்தனர் அந்த படத்திற்கு தான் காங்கேயம் என பெயர் வைக்கப்பட்டது இந்த படத்தில் அஜித் 4 கேரக்டரில் நடிக்க இருந்தார். போஸ்டர்கள் கூட எல்லாம் வெளியாகி என ஆனால் படத்தின் ஷூட்டிங் துவங்க சில நாட்களுக்கு முன்பே அஜித் இந்த படத்தில்  நடிக்கவில்லை எனக் கூறி விலகிக் கொண்டார்.

4. நான் கடவுள் : இயக்குனர் பாலா தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுக்கக்கூடியவர் அந்த வகையில் அஜித்தை வைத்து நான் கடவுள் எனும் படத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தார் இதற்காக அஜித்துக்கும் தாடி எல்லாம் பயங்கரமாக வளர்த்திருந்தார் போஸ்டர்கள் எல்லாம் வெளியாகின ஆனால். ஆனால் பாலாவுக்கும், அஜித்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட பின் அஜித்தின் இந்த படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

5. நேருக்கு நேர் :  வசந்த் இயக்கத்தில் அஜித், விஜயும் சேர்ந்து இந்த திரைப்படத்தில் நடிக்க இருந்தனர். சில காட்சிகள் கூட எடுக்கப்பட்டது ஆனால் இயக்குனர் வசந்த அஜித்தை நடத்திய விதம் சரியில்லாதால் அஜித் படத்தில் இருந்து விலகிக் கொண்டார். அஜித் நடித்த அந்த கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து தன்னை சினிமா உலகில் அறிமுகப்படுத்திக் கொண்டார்.