தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வருகின்றன அதில் பாதி படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன ஒரு சில படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெரும் அந்தப் படங்கள் தான் வசூல் ரீதியாக சாதனை படைக்கின்றன. தற்பொழுது நாம் பார்க்க இருப்பது 2023 ல் வெளிவந்த திரைப்படங்கள் அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த 5 தமிழ் திரைப்படங்களை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்..
1. துணிவு : ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க பேங்கில் நடக்கும் குளறுபடிகளை அப்பட்டமாக வெளிக்காட்டியது அதே சமயம் இந்த படத்தில் ஆக்ஷன், சென்டிமென்ட் போன்றவை சூப்பராக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம் ஒட்டுமொத்தமாக 230 கோடிக்கு மேல் வசூல் செய்தது முதல் நாளில் மட்டும் உலக அளவில் சுமார் 47.20 கோடி வசூல் செய்தது.
2. வாரிசு : வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் வாரிசு இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த ஒரு படமாக இருந்ததால் குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றது அதன் காரணமாக இந்த படம் அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது முதல் நாளில் மட்டும் உலக அளவில் சுமார் 39.60 கோடி வசூல் செய்தது.
3. வாத்தி : வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கல்வி சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருந்ததால் இளசுகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்து இழுத்தது அதன் காரணமாக இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து அசத்தியது முதல் நாளில் மட்டும் உலக அளவில் சுமார் 14.40 கோடி வசூல் செய்தது.
4. பத்து தல : மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களை தொடர்ந்து சிம்பு நடித்த திரைப்படம் தான் பத்து தல. இந்த படம் முழுக்க முழுக்க மணல் மாஃபியா சம்பந்தப்பட்ட ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகியது படத்தின் ஒவ்வொரு சீனும் கைதட்டல் வாங்கியது அதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இந்த படம் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது முதல் நாளில் மட்டும் உலக அளவில் பத்து தல திரைப்படம் சுமார் 12.3 கோடி வசூல் செய்துள்ளது.
5. விடுதலை : தோல்வியை காணாத இயக்குனர் வெற்றிமாறன் இவர் விஜய் சேதுபதி, சூரியை வைத்து எடுத்த இந்த திரைப்படம் போராட்டக்காரர்களுக்கும், போலீசுக்கும் இடையே நடக்கும் பிரச்சனையை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது இந்த படம் அனைத்து தரப்பட்ட மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று தற்பொழுது சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த திரைப்படம் முதல் நாளில் மட்டும் உலக அளவில் சுமார் 5 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.