2022-ல் அதிக வசூல் வேட்டையாடிய 5 தமிழ் திரைப்படங்கள்..! முதலிடத்தில் எந்த படம் தெரியுமா.?

tamil-movie
tamil-movie

இந்த ஆண்டு தமிழ் சினிமா நடிகர்களுக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது ஏனென்றால் பல படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றதுடன் மட்டுமல்லாமல் பிரம்மாண்டமான வசூலை அள்ளி உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டில் வெளிவந்த அஜித், விஜய், விக்ரம், கார்த்தி, கமல் போன்ற நடிகர்கள் படங்கள் நல்ல வசூல் வேட்டை நடத்தி இருக்கின்றன. அந்த வகையில் இந்த ஆண்டில் அதிக வசூலை அள்ளிய ஐந்து திரைப்படங்கள் எது என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.

1. அண்மைக்காலமாக ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருவர் சிவகார்த்திகேயன் இவர் கடைசியாக நடித்த டான் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக அடித்து நொறுகியது இந்த படம் ஒட்டுமொத்தமாக 125 கோடி அள்ளி அசத்தியது. 2. தளபதி விஜய் நெல்சன் உடன் முதல் முறையாக கைகோர்த்து நடித்த திரைப்படம் பீஸ்ட் இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று படம் ஓடியது இருப்பினும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது இந்த படம் 200 கோடி அள்ளியதாக கூறுகின்றன.

3. ஹச். வினோத்துடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து அஜித் நடித்த திரைப்படம் வலிமை இந்த படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார் படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது இந்த படம் ஒட்டுமொத்தமாக 234 கோடி அள்ளி சாதனை படைத்தது.

4. சிறு இடைவேளைக்கு பிறகு கமல் நடித்த திரைப்படம் விக்ரம் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தனக்கே ஊறிய பாணியில்  எடுத்திருந்தார் இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக பட்டையை கிளப்பியது ஒட்டுமொத்தமாக 400 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளி வருகின்றன.

5. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்தினம் எழுத திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று ஆரம்பத்தில் இருந்தே நல்ல வசூல் பேட்டை நடத்தி வருகிறது இந்த படம் வெளியாகி இதுவரை மட்டுமே 350 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.