அதிக வசூல் வேட்டையாடிய 5 இந்திய திரைப்படங்கள்.

பாகுபலி
பாகுபலி

இந்திய அளவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

பாகுபலி 2:- இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெளியாகும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா செட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அதிக வசூல் செய்த வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆம் இந்த திரைப்படம் வெளியாகி 1810 கோடி வரை வசூல் செய்துள்ளது.

கே ஜி எஃப் சாப்டர் 2 :- இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் மற்றும் ஸ்ரீநிதி செட்டி பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் கே ஜி எஃப் சாப்டர் 2. இந்த திரைப்படம்  1233 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

RRR:- இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ரத்தம் ரணம் ரௌத்திரம் திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தில் ராம்சரண் ஜூனியர் என் டி ஆர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் மேலும் இந்த திரைப்படத்தில் பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி 1151. 50 கோடி வரை வசூல் செய்துள்ளது.

2.O:- இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம்  2.O இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் 709 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

பாகுபலி;- இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிகவும் பிரம்மாண்டமாக உருவாகிய திரைப்படம் பாகுபலி. இந்த திரைப்படத்தில் பிரபாஷ் ,அனுஷ்கா,தமன்னா, உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து உள்ளனர். அதிலும் குறிப்பாக ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்டது. இந்த திரைப்படம் விமர்ச்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்ப்பை பெற்றுள்ளது. பாகுபலி திரைப்படம் 605 கோடி வரை வசூல் செய்து உள்ளது.